இன்று 10ம் கட்ட தடுப்பூசி முகாம்: ஒரு லட்சம் பேருக்கு இலக்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்று 10ம் கட்ட தடுப்பூசி முகாம்: ஒரு லட்சம் பேருக்கு இலக்கு

Added : நவ 21, 2021
Share
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை நடந்த, 9 மாபெரும் தடுப்பூசி முகாம்களில், நான்கு லட்சத்து, 207 பேர், தடுப்பூசி செலுத்தி பயன்பெற்றனர். அதேபோல், இன்று, 10ம் கட்டமாக, 666 நிலையான முகாம்கள், 74 நடமாடும் குழுக்கள் என, மொத்தம், 740 முகாம்களில், காலை, 7:00 முதல், இரவு, 7:00 மணி வரை, கொரோனா நோய் 'மெகா தடுப்பூசி முகாம்' நடக்கிறது. முகாம் பணிகளில், 210 மருத்துவர்கள், 430 செவிலியர்கள், 1,600 அங்கன்வாடி

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை நடந்த, 9 மாபெரும் தடுப்பூசி முகாம்களில், நான்கு லட்சத்து, 207 பேர், தடுப்பூசி செலுத்தி பயன்பெற்றனர். அதேபோல், இன்று, 10ம் கட்டமாக, 666 நிலையான முகாம்கள், 74 நடமாடும் குழுக்கள் என, மொத்தம், 740 முகாம்களில், காலை, 7:00 முதல், இரவு, 7:00 மணி வரை, கொரோனா நோய் 'மெகா தடுப்பூசி முகாம்' நடக்கிறது. முகாம் பணிகளில், 210 மருத்துவர்கள், 430 செவிலியர்கள், 1,600 அங்கன்வாடி பணியாளர்கள், 1,400 தன்னார்வலர்கள், 415 பயிற்சி செவிலியர்கள், 265 பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் 1,400 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு, ஒரு லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர், தங்கள் பெற்றோர்களுக்கும், உறவினர்கள், நண்பர்களுக்கும் தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துரைத்து, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு, கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X