சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

Added : நவ 21, 2021
Share
Advertisement
நாமக்கல்: சேந்தமங்கலம் அடுத்த பட்டத்தையன்குட்டையை சேர்ந்தவர் துரைராஜ் மகன் அரவிந்த், 18. துரைராஜ், சரக்கு ஆட்டோவில் வைத்து ஓட்டல், டீ கடைகள் உள்ளிட்ட கடைகளுக்கு, குடிநீர் வினியோகம் செய்து வருகிறார். அதற்கு அரவிந்தன், துணையாக இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, நாமக்கல் அருகே தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியில் ஆட்டோ மொபைல் கடைக்கு, மின்மோட்டாரை இயக்கி

நாமக்கல்: சேந்தமங்கலம் அடுத்த பட்டத்தையன்குட்டையை சேர்ந்தவர் துரைராஜ் மகன் அரவிந்த், 18. துரைராஜ், சரக்கு ஆட்டோவில் வைத்து ஓட்டல், டீ கடைகள் உள்ளிட்ட கடைகளுக்கு, குடிநீர் வினியோகம் செய்து வருகிறார். அதற்கு அரவிந்தன், துணையாக இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, நாமக்கல் அருகே தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியில் ஆட்டோ மொபைல் கடைக்கு, மின்மோட்டாரை இயக்கி அரவிந்த் குடிநீர் சப்ளை செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அரவிந்தை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அரவிந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். நல்லிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X