அரசியல் செய்தி

தமிழ்நாடு

தடுப்பணைகள் அமைக்காததால் பாலாற்றில் தண்ணீர் வீண்: பா.ஜ., குற்றச்சாட்டு

Added : நவ 21, 2021
Share
Advertisement
வேலுார்: ‛‛தடுப்பணைகள் அமைக்காததால், பாலாற்றில் வெள்ளம் வந்தும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது,'' என்று பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் குற்றம்சாட்டினார்.பா.ஜ., சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சிகளில் போட்டியிட விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று வேலுார் வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தி.மு.க., அரசு
தடுப்பணைகள் அமைக்காததால் பாலாற்றில் தண்ணீர் வீண்: பா.ஜ., குற்றச்சாட்டு

வேலுார்: ‛‛தடுப்பணைகள் அமைக்காததால், பாலாற்றில் வெள்ளம் வந்தும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது,'' என்று பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் குற்றம்சாட்டினார்.
பா.ஜ., சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சிகளில் போட்டியிட விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று வேலுார் வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தி.மு.க., அரசு முன்வரவில்லை. மூன்று ரூபாய் பெட்ரோல் விலையை குறைத்து விட்டு ஏமாற்றுகிறது.
காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் வழங்குவேன் என்று கூறினார்கள். அதை வழங்கவில்லை. தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை தி.மு.க., நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வந்தால் விலை கட்டுக்குள் இருக்கும். இதற்கான முயற்சியை தமிழக அரசு எடுக்காமல் உள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி நாளை 22ம் தேதி முதல் டிச., 3ம் தேதி வரை தொடர் போராட்டம் நடத்தப்படும். பிரதமர் மோடி பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என வாக்குறுதி அளிக்கவில்லை. கடந்த 8 மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை 10 ரூபாய் உயர்ந்தது. அதையும் ஒரே நாளில் 10 ரூபாயை மோடி குறைத்து விட்டார்.
மத்திய குழு தமிழகத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட்டு சென்ற பின் மத்திய அரசு நிதியை வழங்குவார்கள். தமிழகத்தில் 222 கி.மீ., துாரம் ஓடும் பாலாற்றில் தடுப்பணைகள் அமைக்காததால் இப்போது வரும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.
முல்லை பெரியாறு அணையில் 110 அடிக்கு மேல் தேக்கினால் மட்டும் தமிழகத்திற்கு தண்ணீர் வரும். ஆனால், தண்ணீரை தமிழக அதிகாரிகள் திறந்து விட்டார்கள் என அமைச்சர் துரைமுருகன் பொய் சொல்கிறார். தி.மு.க., அரசு ஆட்சிக்கு வரும் போதெல்லாம் தமிழகத்தின் நதிநீர் உரிமைகள் பறிபோகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X