பொது செய்தி

இந்தியா

கடல்சார் சர்வதேச ஒப்பந்தத்தை மீறும் சீனா: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

Updated : நவ 21, 2021 | Added : நவ 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மும்பை: ஐ.என்.எஸ். விசாகபட்டினம் போர்க்கப்பல் கடற்படையில் இணைப்பு விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‛‛சில பொறுப்பற்ற நாடுகள் கடல்சார் தொடர்புடைய சர்வதேச ஒப்பந்தத்தை மீறுகின்றன,'' என சீனாவை குற்றம்சாட்டி பேசினார்புதிதாக கட்டமைக்கப்பட்ட ஐ.என்.எஸ். விசாகபட்டினம் போர்க்கப்பல், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கடற்படையில்
ஐஎன்எஸ் விசாகபட்டினம், போர்க்கப்பல், இந்தியா, கடற்படை, இணைப்பு

மும்பை: ஐ.என்.எஸ். விசாகபட்டினம் போர்க்கப்பல் கடற்படையில் இணைப்பு விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‛‛சில பொறுப்பற்ற நாடுகள் கடல்சார் தொடர்புடைய சர்வதேச ஒப்பந்தத்தை மீறுகின்றன,'' என சீனாவை குற்றம்சாட்டி பேசினார்


latest tamil news



புதிதாக கட்டமைக்கப்பட்ட ஐ.என்.எஸ். விசாகபட்டினம் போர்க்கப்பல், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‛ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம்' போர்க்கப்பலை இன்று (நவ.,21) முறைப்படி இந்திய கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.

ஐ.என்.எஸ். விசாகப்பட்டணம் போர்க்கப்பலானது ‛மேட் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் மும்பையில் உள்ள கப்பல்கட்டும் நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ளது.இது பாதுகாப்புத்துறையில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும்.இந்த போர்க்கப்பல் நவீன கருவிகள், வசதிகள் நிறைந்தது ஆகும். மேலும் ரேடார்களால் கண்டுபிடிக்க இயலாத, எதிரியை அழிக்கும் சக்திவாய்ந்த ஏவுகணைகள் உடைய இந்த போர்க்கப்பல் 7,400 டன் எடை கொண்டதாகும். இக்கப்பலை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.


latest tamil news


இந்தோ பசிபிக் கடல் பிராந்தியத்தில் சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் இந்த கப்பலின் வருகை இந்திய கடற்படைக்கு கூடுதல் வலிமையை தரும். முக்கியமாக இந்த கப்பல் அணு, உயிரியல் மற்றும் வேதியியல் பண்புகள் கொண்ட போர்க்களுக்கு ஏற்றதாகும். நம் நாட்டில் கட்டப்பட்டுள்ள போர்க்கப்பல்களில் இதுவே பெரியதாகும்.

இந்நிகழ்ச்சியில், பங்கேற்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் பேசியதாவது: இந்தோ பசுபிக் கடல்பாதையில் இந்திய கடற்படையின் பங்கு மிகவும் முக்கியமானது. விசாகப்பட்டினம் போர்க்கப்பல் நமது நாட்டில் கட்டப்பட்டுள்ள போர்க்கப்பல்களில் மிகவும் பெரியதாகும். மேக் இன் இந்தியா திட்டத்தில் போர்க்கப்பல்கள், நீர் மூழ்கி கப்பல்கள் தயாரிப்பில் நமது நாடு முன்னிலையில் உள்ளது. இந்தியாவை உள்நாட்டு கப்பல் கட்டும் மையமாக உருவாக்க எல்லா வாய்ப்புகளும் நமக்கு உள்ளன. குறுகிய நலன்கள் கொண்ட சில பொறுப்பற்ற நாடுகள் கடல் சார் தொடர்புடைய சர்வதேச ஒப்பந்தத்தை மீறுகின்றன. இந்தியா பொறுப்பு வாய்ந்த நாடாக திகழ்கிறது. இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - erode,இந்தியா
21-நவ-202123:10:07 IST Report Abuse
rajan சீனாவை பெயர் சொல்லி குறிப்பிட தைரியம் இல்லாத தேசபக்தி பதிலடி கொடுப்போம் என்று சொல்லும் பிஜேபி அரசின் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் சீனா பயப்படுகிறது என்று வாயில் வடை சுடும் ஒன்றிய அமைச்சர்கள் பதிலடி கொடுக்காமல் மீறுகிறார்கள் என்று சொல்ல ஒரு அமைச்சர் தேவையா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X