ராஜஸ்தான் அமைச்சரவை விரிவாக்கம்: 15 பேர் புதிதாக பதவியேற்பு| Dinamalar

ராஜஸ்தான் அமைச்சரவை விரிவாக்கம்: 15 பேர் புதிதாக பதவியேற்பு

Updated : நவ 21, 2021 | Added : நவ 21, 2021 | கருத்துகள் (2)
Share
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் புதிய அமைச்சரவை இன்று (நவ.,21) மாற்றி அமைக்கப்பட்டது. 11 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 4 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்று கொண்டனர். சச்சின் பைலட் ஆதரவாளர்கள் 5 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு கடந்த ஆண்டு, காங்., கட்சியின் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.,க்கள், அசோக்
ராஜஸ்தான், அமைச்சரவை, விரிவாக்கம்,பதவியேற்பு,Ministers,  Rajasthan, Ashok Gehlot, Balancing Act

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் புதிய அமைச்சரவை இன்று (நவ.,21) மாற்றி அமைக்கப்பட்டது. 11 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 4 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்று கொண்டனர். சச்சின் பைலட் ஆதரவாளர்கள் 5 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு கடந்த ஆண்டு, காங்., கட்சியின் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.,க்கள், அசோக் கெலாட் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கட்சித் தலைமை அறிவுறுத்தியதால் அவர்கள் அமைதி காத்து வந்தனர். கடந்த சில நாட்களாக முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட், மாநில காங்., பொறுப்பாளர் அஜய் மாக்கன் உள்ளிட்டோர் டில்லிக்கு சென்று, கட்சித் தலைமையை தொடர்ந்து சந்தித்து வந்தனர். அமைச்சரவை விரிவாக்கம் குறித்து அவர்கள் பேச்சு நடத்தி வந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் புதிய அமைச்சர்கள் இன்று பதவி ஏற்று கொண்டனர். ஜெய்ப்பூரில் உள்ள கவர்னர் மாளிகையில் மாலை 4:00 மணிக்கு நடந்த விழாவில் 11 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 4 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்று கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதன் மூலம் மாநில அமைச்சரவையின் பலம், முதல்வரையும் சேர்த்து 30 ஆக அதிகரித்தது. இன்று பதவி ஏற்று கொண்டவர்களில் 5 பேர், சச்சின் பைலட் ஆதரவாளர்கள் ஆவார்கள்.


latest tamil news



இதனிடையே, அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதில் சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ., ஷாபியா ஜூபைர் கூறுகையில், அமைச்சரவை சிறப்பானதாக இல்லை. கெட்ட பெயர் உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவை, மக்களுக்கு நல்ல செய்தியை அனுப்பவில்லை. பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மற்றொரு எம்.எல்.ஏ., ஜோஹாரி லால் மீனா கூறுகையில், ஆல்வர் மாவட்டத்தில், திக்ரம் ஜூலி ஊழல் செய்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். பணம் வசூலிப்பதில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். அவரை நீக்க வேண்டும் என கட்சி தலைமையிடம் தெரிவித்தோம். ஆனால், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதனை மறுத்துள்ள திக்ரம், ஜோஹாரி லால்மீனா கட்சியின் மூத்த தலைவர். அவரை நான் மதிக்கிறேன். அதேநேரத்தில் அவர் தெரிவித்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டியுள்ளார். அவரிடம் ஏதேனும் ஆதாரம் இருந்தால், அதனை வெளியிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X