பொது செய்தி

இந்தியா

பி.என்.பி., சர்வரில் பாதிப்பு: கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் தகவல்கள் அம்பலம்!

Updated : நவ 21, 2021 | Added : நவ 21, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி: பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் சர்வரில் ஏற்பட்ட பாதிப்பால் கடந்த 7 மாதங்களாக அவ்வங்கியின் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்துள்ளன. இதை சைபர் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று பகிரங்கப்படுத்தியுள்ளது.வங்கியின் சர்வரில் ஏற்பட்ட பாதிப்பால் முழு டிஜிட்டல் அமைப்புக்கும் நிர்வாகக்
பஞ்சாப் நேஷனல் வங்கி, சர்வர் பாதிப்பு, கோடிக்கணக்கான வாடிக்கையாளர், தகவல்கள், அம்பலம்,

புதுடில்லி: பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் சர்வரில் ஏற்பட்ட பாதிப்பால் கடந்த 7 மாதங்களாக அவ்வங்கியின் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்துள்ளன. இதை சைபர் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று பகிரங்கப்படுத்தியுள்ளது.


latest tamil news


வங்கியின் சர்வரில் ஏற்பட்ட பாதிப்பால் முழு டிஜிட்டல் அமைப்புக்கும் நிர்வாகக் கட்டுப்பாட்டுடன் அணுகலை வழங்கியதாக சைபர் எக்ஸ்9 எனும் அந்நிறுவனம் கூறியுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி இக்கோளாறை உறுதி செய்துள்ளது. ஆனால், பாதிப்பு காரணமாக வாடிக்கையாளர்கள் தரவுகள் எதுவும் வெளியாகவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சர்வரை நிறுத்தியுள்ளதாக அறிவித்தனர். பாதிப்பு ஏற்பட்ட சர்வரில் எந்த முக்கிய தகவல்களும் இல்லை. அவ்வப்போது மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற தகவல் பாதுகாப்பு ஆடிட்டர்களால் சர்வர்கள் சோதிக்கப்பட்டே வருகிறது என்றனர்.

இப்பாதிப்பை கண்டறிந்த சைபர் எக்ஸ்9 நிறுவனர் ஹிமான்சு பதக் கூறியதாவது: பஞ்சாப் நேஷனல் வங்கி கடந்த 7 மாதங்களாக அதன் 18 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களை பாதுகாப்பதில் கடுமையாக சமரசம் செய்துள்ளது. சி.இ.ஆர்.டி., எனப்படும் இந்திய கணினி அவசரக்கால நடவடிக்கை குழு மூலம் வங்கிக்கு தகவல் அளித்தோம். அதன் பிறகே பஞ்சாப் நேஷனல் வங்கி விழித்துக்கொண்டு நடவடிக்கை எடுத்தது. எக்ஸ்சேஞ்ச் சர்வரில் இப்பாதிப்பு காணப்பட்டது. அதன் மூலம் டொமைன் கட்டுப்பாட்டை அணுகினால், நெட்வொர்க்கில் எந்த கணினியையும் அணுகுவதற்கு கதவுகள் மிக எளிதாக திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PUSHYA PUTHTHIRN - chennai,இந்தியா
22-நவ-202114:44:30 IST Report Abuse
PUSHYA  PUTHTHIRN தற்போது அனைத்து துறை, அரசு மற்றும் மற்ற அலுவலக ஊழியர்களின் சம்பளம் அவரவர்கள் வங்கி கணக்கில் தான் செலுத்தப் படுகின்றது////மத்திய மற்றும் மாநில அரசுகளின் சிறப்புத் திட்டங்கள் பயனாளிகளை வங்கி கணக்கு மூலமாகவே சென்றடைகிறது/// இப்படி பல விஷயங்களுக்காக வங்கி கணக்கு வைத்திருப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி அதிகரித்தே வருகிறது//// அதற்கு ஏற்றாற் போல் பரிமாற்றங்களை திறமையாக கையாளும் மென்பொருள் மற்றும் ஒரு ROBUST TEM வங்கிகளிடம் உள்ளதா என்றால் அது கேள்விக் குறியே ///////பல முறை வங்கிகளில் பாஸ் புத்தகம் அச்சடிக்கக் கொடுத்தாலோ அல்லது பண எடுக்கப் போனாலோ ""சர்வர் ஸ்லோ"" என்று ஊழியர்கள் சொல்லும் நிலை அடிக்கடி நிகழ்கிறது ///வாடிக்கையாளர் நேரத்தை வீண் செய்து கொண்டு காத்திருக்கும் நிலை//// இப்போது வங்கிகளுக்கு மேலாக கணினி மயமாக்கப் பட்ட ரயில்வே துறையில், மிக மிக அதிகமான ,கடினமான டேட்டாக்களை கையாள வேண்டிய நிலையில் உள்ள அத்துறை மிக மிக திறமையாக எந்த பெரிய பிரச்சினையும் இன்றி செயலாற்றி வருகிறது என்பது குறிப்பிட தக்கது //////// வங்கிகள் வாடிக்கையாளர்கள் விஷயத்தில் சமரசம் செய்யாமல் விலையைப்பற்றி கவலைப் படாமல் மிக உயரிய, பாதுகாப்பானதும், நம்பத்தகுந்ததுமான பயர் வால் மற்றும் மென் பொருளுக்கு மாற வேண்டும்///அல்லது இருப்பதை உயர்த்த வேண்டும்///////மக்கள் நம்பிக்கையை இழக்கக் கூடாது//////
Rate this:
Cancel
22-நவ-202111:58:27 IST Report Abuse
அப்புசாமி அப்பிடியே விஷயம் தெரிஞ்சவங்க நீரவ் மோடி, சோக்சி போன்றவர்களின் தற்போதைய இருப்பிட விலாசத்தைப் பகிருங்கள். இந்திய அரசே தேடிட்டிருக்காம்.
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
22-நவ-202107:13:40 IST Report Abuse
Barakat Ali வாடிக்கையாளர்களின் தகவல்களை (முக்கியமாக செல்பேசி எண்) வங்கிகளே ப்ராடெக்ட் சேல்ஸ் மென்களிடம் கொடுப்பதுண்டு
Rate this:
PUSHYA PUTHTHIRN - chennai,இந்தியா
22-நவ-202120:11:34 IST Report Abuse
PUSHYA  PUTHTHIRNஉண்மை. முன் பின் தெரியாத வெளி நபர்கள் எல்லாம் நமக்கு திடீரென்று போன் செய்து இன்ன வங்கியிலிருந்து பேசுகிறேன், உங்களுக்கு என்ன லோன் வேணும் , இன்சூரன்ஸ் பாலிசி எடுங்கள், ஆபர்ர இருக்கு என்றெல்லாம் கூறி ஒரே டார்ச்சர் தான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X