சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்மனச்சோர்வு நீக்கும் காபிதினமும் இரண்டு வேளை காபி, அல்லது டீ குடிப்பவர்களுக்கு பக்கவாதம், மனச்சோர்வு பாதிப்பு ஏற்படுவதற்கான ஆபத்தை மூன்றில் ஒரு பங்கு குறைக்கிறது என சீனாவின் டியான்ஜின் மருத்துவ பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. பிரிட்டனில் 2006 - 2010 வரை 50 - 74 வயதுக்குட்பட்ட 5 லட்சம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் அவர்களின் உடல்நலன், சூடான பானம் குடிக்கும்

அறிவியல் ஆயிரம்

மனச்சோர்வு நீக்கும் காபி


தினமும் இரண்டு வேளை காபி, அல்லது டீ குடிப்பவர்களுக்கு பக்கவாதம், மனச்சோர்வு பாதிப்பு ஏற்படுவதற்கான ஆபத்தை மூன்றில் ஒரு பங்கு குறைக்கிறது என சீனாவின் டியான்ஜின் மருத்துவ பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. பிரிட்டனில் 2006 - 2010 வரை 50 - 74 வயதுக்குட்பட்ட 5 லட்சம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் அவர்களின் உடல்நலன், சூடான பானம் குடிக்கும் பழக்கம் பற்றி கேட்கப்பட்டது. இதில் டீ, காபி பழக்கம் இல்லாதவர்களை விட, டீ, காபி குடிப்பவர்களுக்கு பக்கவாதம், மனச்சோர்வு பாதிக்கும் ஆபத்து குறைகிறது என கண்டுபிடித்தனர்.

தகவல் சுரங்கம்

இமயமலையின் தனித்துவம்


லடாக் யூனியனில் ெஹமிஸ் தேசியப்பூங்கா அமைந்து உள்ளது. இப்பூங்கா பனி சிறுத்தைக்காக உலகளவில் பிரபலம். உலகில் இங்கு தான் அதிக அடர்த்தியில் பனி சிறுத்தை உள்ளது. இது தவிர பல வகை உயிரினங்களும் வாழ்கின்றன. இது இமயமலையின் வடக்கு பகுதியில் உள்ள ஒரே தேசியப்பூங்கா. இது இந்தியாவில் பரப்பளவு அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட தேசியப்பூங்காவில் பெரியது. இதன் எல்லையில் சிந்து ஆறு ஓடுகிறது. இதன் பரப்பளவு 4400 சதுர கி.மீ. இது கடல் மட்டத்தில் இருந்து 17 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. 1981ல் இப்பூங்கா தொடங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X