இறைச்சி பிரியருக்கு சீன ஓட்டலில் தடை

Updated : நவ 21, 2021 | Added : நவ 21, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
பீஜிங்:சீனாவில் கிலோ கணக்கில் இறைச்சி சாப்பிட்ட இளைஞருக்கு ஓட்டல் நிர்வாகம் தடை விதித்துள்ளது. நம் அண்டை நாடான சீனாவின் ஷாங்ஷா நகரில் வசிப்பவர் ஹாங். இளைஞரான இவருக்கு சாப்பிடுவதில் அலாதி பிரியம். அதுவும் கிலோ கணக்கில் தான் சாப்பிடுவார். இவர் இறைச்சி சாப்பிடும் 'வீடியோ' அடிக்கடி சமூக வலைதளங்களில் பரவும். அங்குள்ள ஹண்டாடி பார்பிக்யூ ஓட்டலுக்கு அடிக்கடி

பீஜிங்:சீனாவில் கிலோ கணக்கில் இறைச்சி சாப்பிட்ட இளைஞருக்கு ஓட்டல் நிர்வாகம் தடை விதித்துள்ளது.latest tamil newsநம் அண்டை நாடான சீனாவின் ஷாங்ஷா நகரில் வசிப்பவர் ஹாங். இளைஞரான இவருக்கு சாப்பிடுவதில் அலாதி பிரியம். அதுவும் கிலோ கணக்கில் தான் சாப்பிடுவார். இவர் இறைச்சி சாப்பிடும் 'வீடியோ' அடிக்கடி சமூக வலைதளங்களில் பரவும். அங்குள்ள ஹண்டாடி பார்பிக்யூ ஓட்டலுக்கு அடிக்கடி செல்வார். சில தினங்களுக்கு முன் 2 கிலோ பன்றி இறைச்சி சாப்பிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில், சமீபத்தில் அதே ஓட்டலில் 4 கிலோ இறால் மீன் சாப்பிட்டார்.

இதையடுத்து, தங்கள் ஓட்டலுக்கு ஹாங் இனி சாப்பிட வரக்கூடாது என, ஹண்டாடி பார்பிக்யூ ஓட்டல் நிர்வாகம் தடை விதித்து விட்டது. அதைக் கேட்ட ஹாங், ''நான் எந்த உணவையும் வீணாக்கவில்லை. என்னால் அதிகமாக சாப்பிட முடிகிறது. எனக்கு தடை விதித்து இருப்பது நியாயமற்றது,'' என, தன் வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.


latest tamil newsஓட்டல் நிர்வாகியோ, 'ஹாங் எங்கள் ஓட்டலுக்கு வந்தால் தயார் செய்து வைத்துள்ள உணவில் பாதிக்கும் மேல் காலி செய்து விடுகிறார். மற்ற வாடிக்கையாளருக்கு கிடைக்காமல் போகிறது. எனவே தான் அவரை எங்கள் ஓட்டலுக்கு வர தடை விதித்துள்ளோம்' என்கிறார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
22-நவ-202107:23:37 IST Report Abuse
 N.Purushothaman அங்க இருக்கிறதை விடுங்க ...மொதல்ல தமிழகத்திலே கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக உடலுக்கு கேடு விளைவிக்கும் பிரியாணியும் பரோட்டாவும் கட்டுப்பாடு சுகாதாரம் என எதுவும் இல்லாமல் கண்ட கண்ட இடங்களில் தாறுமாறாக விற்கப்படுகிறது ...இந்த ரெண்டுக்கும் தேவையற்ற விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு இவை ரெண்டும் ஏதோ தமிழர்களின் பாரம்பரிய உணவு போல கொண்டாடப்படுவது அக்கிரமத்தின் உச்சம் ....
Rate this:
Cancel
Columbus -  ( Posted via: Dinamalar Android App )
21-நவ-202123:18:37 IST Report Abuse
Columbus Chinese Bagasooran !!! 😁😁😊😊😂😂
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
21-நவ-202121:27:43 IST Report Abuse
Barakat Ali இது விளம்பரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X