பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய வலுதூக்கும் போட்டி: தங்கம் வென்ற குளித்தலை மாணவி பவதர்சினிக்கு உற்சாக வரவேற்பு

Added : நவ 21, 2021
Share
Advertisement
குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்தவர் ராஜா இவர் டெக்ஸ் வேலை பார்த்து வருகிறார் மனைவி மகேஸ்வரி இவர்களது மகள் பவ தர்ஷினி தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார் இவர் வலுதூக்கும் போட்டிக்கு ஆர்வம் கொண்டு குளித்தலை அஷ்டதிக் பிட்டிங் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார் தொடர்ந்து சமீபத்தில் அக்டோபர் 24ஆம் தேதி
தேசிய வலுதூக்கும் போட்டி: தங்கம் வென்ற  குளித்தலை மாணவி பவதர்சினிக்கு உற்சாக வரவேற்பு

குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்தவர் ராஜா இவர் டெக்ஸ் வேலை பார்த்து வருகிறார் மனைவி மகேஸ்வரி இவர்களது மகள் பவ தர்ஷினி தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார் இவர் வலுதூக்கும் போட்டிக்கு ஆர்வம் கொண்டு குளித்தலை அஷ்டதிக் பிட்டிங் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார் தொடர்ந்து சமீபத்தில் அக்டோபர் 24ஆம் தேதி குளித்தலையில் மாநில அளவில் நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் 8 தங்கப் பதக்கம் பெற்று மாநில அளவில் ஸ்டாஸ் உமன் ஆப் தமிழ்நாடு சிறப்பு பரிசு பெற்றார்
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் பவர்லிப்டிங் பெடரேஷன் சார்பில் நடைபெற்ற தேசிய அளவில் வலுதூக்கும் போட்டியில் தமிழகத்திலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர் அதில் கரூர் மாவட்டம் குளித்தலை மாணவி பவதர்ஷினி 69 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் .
சாதனைபடைத்த மாணவி பவதர்னிக்கு குளித்தலை பஸ்நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது இதில் எம்எல்ஏ மாணிக்கம் கலந்துகொண்டு வலுதூக்கும் போட்டியில் தேசிய அளவில் தங்கம் வென்ற மாணவி பவ தர்ஷினி மாலை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார் இதில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் பல்லவி ராஜா மாஸ்டர் நிவாஸ் அரசு வக்கீல் சாகுல் அமீது மற்றும் பொதுமக்கள் உறவினர்கள் ஏராளமானோர் கலந்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர் அதனைத்தொடர்ந்து ஊர்வலமாக அழைத்து சென்றனர் .

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X