ஆதார் எண் மூலம் கூடுதல் சேவை வழங்க... ஆலோசனை!:சர்வதேச தரத்தை எட்ட பயிற்சிக்கு ஏற்பாடு

Updated : நவ 23, 2021 | Added : நவ 21, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி:ஆதார் எண் வாயிலாக வேறு என்னென்ன சேவைகள் வழங்கலாம், சேவைகளை மேம்படுத்துவது, சர்வதேச தரத்தை எட்டுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்க, மூன்று நாள் பயிலரங்கத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.தற்போது நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் எண் வழங்கப்படுகிறது. பல்வேறு அரசு துறைகளின் சேவைகள், பலன்கள், மானியங்களைப் பெறுவதற்கு ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ஒரு
ஆதார் எண் மூலம் கூடுதல் சேவை வழங்க... ஆலோசனை!:சர்வதேச தரத்தை எட்ட பயிற்சிக்கு ஏற்பாடு

புதுடில்லி:ஆதார் எண் வாயிலாக வேறு என்னென்ன சேவைகள் வழங்கலாம், சேவைகளை மேம்படுத்துவது, சர்வதேச தரத்தை எட்டுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்க, மூன்று நாள் பயிலரங்கத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

தற்போது நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் எண் வழங்கப்படுகிறது. பல்வேறு அரசு துறைகளின் சேவைகள், பலன்கள், மானியங்களைப் பெறுவதற்கு ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ஒரு தனிநபரின் அடையாளமாக ஆதார் மாறியுள்ளது.


டிஜிட்டல்

இந்நிலையில், ஆதார் வாயிலாக கூடுதலாக வேறு என்னென்ன சேவைகள் வழங்கலாம் என்பது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக, மூன்று நாள் பயிலரங்கத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.'ஆதார் 2.0 - டிஜிட்டல் அடையாளத்தில் புதிய யுகம் மற்றும் சிறப்பான நிர்வாகம்' என்ற தலைப்பில் வரும் வாரத்தில் இது நடக்க உள்ளது. இதில், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் பங்கேற்கின்றனர்.
ஆதார் அடையாள அட்டை வழங்கும் உடாய் அமைப்பின் முன்னாள் தலைவர்கள் நந்தன் நீலேகனி, ஆர்.எஸ்.சர்மா, அஜய் பூஷன் பாண்டே, பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவர் பிபேப் தேப்ராய், நிதி செயலர் டி.வி.சோமநாதன் பங்கேற்கின்றனர்.தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் அஜய் பிரகாஷ் சாஹ்னே நிடி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் உட்பட துறை நிபுணர்களும் பங்கேற்க உள்ளனர்.

இது குறித்து அரசு உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது:மிகவும் நம்பத்தகுந்த அடையாள அட்டையாக ஆதார் மாறியுள்ளது. 'பயோமெட்ரிக்' எனப்படும் கைவிரல் ரேகை உள்ளிட்ட பதிவுகள் உள்ளதால், ஆதாரை சர்வதேச தரத்தில் டிஜிட்டல் அடையாளமாக மாற்றுவது குறித்து ஆராயப்பட உள்ளது.


அடுத்த கட்டம்

டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியில் ஆதாரை பயன்படுத்துவது என, அடுத்த கட்டத்துக்கு ஆதாரை இட்டுச் செல்ல நிபுணர்கள் ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


பொய் செய்தியை தடுக்க திட்டம்

தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பொய் மற்றும் போலி செய்திகள் வெளியாவதை தடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, தகவல் தொழில்நுட்பத் துறைக்கான பார்லிமென்ட் நிலைக் குழு தன் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை, வரும் பார்லி., கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய உள்ளது.

அதில், தேசத்துக்கு விரோதமான அணுகுமுறை என்பதற்கான விளக்கத்தை, செய்தி மற்றும் ஒலிபரப்பு துறை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகள் அளிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
22-நவ-202117:12:40 IST Report Abuse
jayvee இதை எதிர்த்து சமூக ஆர்வலர்கள் வழக்கு.. நீதிமன்றம் இடைக்கால தடை. வரும் பாருங்க
Rate this:
Cancel
22-நவ-202116:18:09 IST Report Abuse
அப்புசாமி சர்வதேசத் தரம் என்னன்னு தெரியாமலே திட்டம் தீட்டுறாங்க. எந்த ஊர்ல 30 கோடி ரேஷன் கார்டுகளை 80 கோடி கார்டுகளா உசத்தி சாதனை பண்றாங்க? உ.பி ஆளுங்களுக்கு அங்கே வேலை வெட்டி குடுக்காம தெக்கால அனுப்பி ரேஷன் கார்டை குடுத்து பஞ்சம் பொழைக்க அனுப்புறாங்க?
Rate this:
Cancel
22-நவ-202115:48:42 IST Report Abuse
அப்புசாமி ஆதாரை இன்னும் என்னென்ன அட்டையோட இணைக்கலாம்னு திட்டம் போடுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X