அம்மா கிளினிக்குகளுக்கு ஒரு நர்ஸ் கூட தேர்வு செய்யப்படவில்லை: மந்திரி புகார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அம்மா கிளினிக்'குகளுக்கு ஒரு நர்ஸ் கூட தேர்வு செய்யப்படவில்லை: மந்திரி புகார்

Updated : நவ 23, 2021 | Added : நவ 21, 2021 | கருத்துகள் (9)
Share
சென்னை:''வடகிழக்கு பருவமழைக்கான மருத்துவ முகாமில், 14.89 லட்சம் பேர் பயனடைந்து உள்ளனர்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னையில் 10வது 'மெகா' தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. அதையொட்டி, திருவொற்றியூர், பொன்னியம்மன் நகர், தாழங்குப்பம், ராஜாஜி நகர், தேரடி ஆகிய இடங்களில் நடந்த தடுப்பூசி முகாம்களை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
'அம்மா கிளினிக்'குகளுக்கு ஒரு நர்ஸ் கூட  தேர்வு செய்யப்படவில்லை: மந்திரி புகார்

சென்னை:''வடகிழக்கு பருவமழைக்கான மருத்துவ முகாமில், 14.89 லட்சம் பேர் பயனடைந்து உள்ளனர்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னையில் 10வது 'மெகா' தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. அதையொட்டி, திருவொற்றியூர், பொன்னியம்மன் நகர், தாழங்குப்பம், ராஜாஜி நகர், தேரடி ஆகிய இடங்களில் நடந்த தடுப்பூசி முகாம்களை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் பார்வையிட்டார்.


'இல்லம் தேடி மருத்துவம்'

பின், அவர் அளித்த பேட்டி:சென்னையில் 1,600 இடங்களில், இரண்டு லட்சம் என்ற இலக்குடன் தமிழகத்தில் 50 ஆயிரம் இடங்களில் 71 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்குடன், 10வது மெகா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது.மழைக்கான சிறப்பு முகாம்களை பொறுத்தவரை, சென்னையில் 9,521 முகாம்களில், 3 லட்சத்து 36 ஆயிரத்து 341 பேரும், தமிழகத்தில் 38 ஆயிரத்து 566 இடங்களில், 14.89 லட்சம் பேரும் பயனடைந்துள்ளனர்.
'இல்லம் தேடி மருத்துவம்' திட்டத்தின் கீழ் இதுவரை, 40 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்தனர். தமிழகத்தில் 70 சதவீதம் பேர் முதல் தவணையும், 35 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர்.'அம்மா கிளினிக்'குகளுக்கு பதில், இல்லம் தேடி மருத்துவம் கொண்டு வரவில்லை. ஆறு மாதங்களில் அதிகளவில் மருத்துவ மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.


வெறும் பலகைகள்

கடந்த ஆட்சியில், 2,000 அம்மா கிளினிக்குகள் திறக்கப்படும் என அறிவித்து விட்டு, வெறும் பலகைகள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. 1,900 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டனர். ஆனால், ஒரு செவிலியரை கூட தேர்வு செய்யவில்லை.அம்மா கிளினிக்கால் பயன் பெற்றவர்கள், பணி அமர்த்தப்பட்டவர் விவரத்தை, முன்னாள் முதல்வர் பழனிசாமி வெளியிட்டால் மகிழ்ச்சி.

பொது இடங்களுக்கு தடுப்பூசி போட்டவர்கள் தான் செல்ல வேண்டும் என்ற அரசாணை வெளியிட்ட பின், தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.இந்நிகழ்வில், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, எம்.எல்.ஏ.,க்கள் சுதர்சனம், சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X