'வலிமையான தலைமை இருந்திருந்தால் 1962ல் சீனாவை இந்தியா வென்றிருக்கும்'

Updated : நவ 21, 2021 | Added : நவ 21, 2021 | கருத்துகள் (40)
Share
Advertisement
இடாநகர்:''வலிமையான தலைமை இருந்திருந்தால், 1962 ல் நடந்த போரில் சீனாவை இந்தியா வென்றிருக்கும்,'' என, அருணாச்சல பிரதேச கவர்னரும், ஓய்வு பெற்ற ராணுவ பிரிகேடியருமான பி.டி.மிஸ்ரா தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலமான அருணாச்சலில் முதல்வர் பெமா காண்டு தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சாங்லாங் மாவட்டத்தில் நடந்த ராணுவ வீரர்கள் கூட்டத்தில், மாநில கவர்னர்

இடாநகர்:''வலிமையான தலைமை இருந்திருந்தால், 1962 ல் நடந்த போரில் சீனாவை இந்தியா வென்றிருக்கும்,'' என, அருணாச்சல பிரதேச கவர்னரும், ஓய்வு பெற்ற ராணுவ பிரிகேடியருமான பி.டி.மிஸ்ரா தெரிவித்துள்ளார்.



latest tamil news



வடகிழக்கு மாநிலமான அருணாச்சலில் முதல்வர் பெமா காண்டு தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சாங்லாங் மாவட்டத்தில் நடந்த ராணுவ வீரர்கள் கூட்டத்தில், மாநில கவர்னர் பி.டி.மிஸ்ரா கூறியதாவது:நாட்டை பாதுகாக்கும் ஒப்பற்ற பணியில் நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள். ராணுவத்தில் பணியாற்றியவன் என்பதில் எனக்கு எப்போதும் பெருமை.பாகிஸ்தானுக்கு எதிராக 1965ல் நடந்த போரில் நான் பங்கேற்றேன். ராணுவ வீரர்கள் நலனில் இப்போதுள்ள மத்திய அரசு மிகவும் அக்கறை வைத்துள்ளது.


latest tamil news



இந்தியாவுக்கு வலிமை ஆன தலைமை இருந்திருந்தால், 1962ல் சீனாவுக்கு எதிரான போரின் முடிவு வேறு மாதிரியாக இருந்து இருக்கும். இந்தியா வெற்றி பெற்று இருக்கும்; தன் பகுதிகளை இழந்து இருக்காது. ஆனால், தற்போது வலிமையான ராணுவ பலம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
22-நவ-202120:21:33 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN இங்க விலையிறதை தின்னுட்டு நம்ம நாட்டையே கேலி பேச மூர்க்க, அர்பன் நக்சல் கும்பலால் தான் முடியும்
Rate this:
Cancel
Senthil Kumar - Chennai,இந்தியா
22-நவ-202119:08:34 IST Report Abuse
Senthil Kumar சீனா போரிட்டு 40வருடஙகளுக்கு மேல் ஆகிறது.ஆனால் இந்தியா பயங்கரமான தீவிரவாதிகளுடன் தினம் தினம் போரடுகிறது. இந்தியா தோற்றது ஒருகாலம். அது பழைய கதை. இந்தமுறை சீனா தோல்வியைத்தான் தழுவும். 140 கோடி பேரும் சீனா எல்லையை நோக்கி படை எடுப்போம். ஒரு புதிய வல்லரசு கர்ஜிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
Rate this:
Cancel
Senthil Kumar - Chennai,இந்தியா
22-நவ-202119:00:27 IST Report Abuse
Senthil Kumar சீனா போர் புரிந்து 40ஆண்டுகள் ஆகிறது.ஆனால் இந்தியா தினம் தினம் பயங்கரமான தீவிரவாதிகளுடன் போராடுகிறது.தோற்றது ஒரு காலம்.ஆனால் இந்த முறை சீனா தோல்வி யைதான் தழுவும். எங்கள் நாடே திரண்டு வரும். ஒரு புதிய வல்லரசு உருவாகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X