அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கூட்டணியில் குழப்பம் இல்லை; அதிக இடத்தில் பா.ஜ., போட்டி'

Updated : நவ 23, 2021 | Added : நவ 21, 2021 | கருத்துகள் (4+ 6)
Share
Advertisement
சென்னை:''உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிடுவோம்; அ.தி.மு.க., கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை; சுமூக உறவு நீடிக்கிறது,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம், பா.ஜ., நேற்று முதல் விருப்ப மனுக்களை பெற துவங்கிஉள்ளது. அரசியல் ஆதாயம் சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில், அண்ணாமலை,
'கூட்டணியில் குழப்பம் இல்லை; அதிக இடத்தில் பா.ஜ., போட்டி'

சென்னை:''உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிடுவோம்; அ.தி.மு.க., கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை; சுமூக உறவு நீடிக்கிறது,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம், பா.ஜ., நேற்று முதல் விருப்ப மனுக்களை பெற துவங்கிஉள்ளது.


அரசியல் ஆதாயம்



சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில், அண்ணாமலை, வி.பி.துரைசாமி, கராத்தே தியாகராஜன் ஆகியோர் முன்னிலையில், சென்னை மாநகராட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

பின், நிருபர்களுக்கு அண்ணாமலை அளித்த பேட்டி:வேளாண் சட்டங்களை திரும்ப பெற்ற, பிரதமர் மோடியின் அறிவிப்பை வரவேற்கிறோம். அச்சட்டங்களை பற்றி விவசாயிகளுக்கு புரிய வைக்கும் முயற்சியை மத்திய அரசு செய்தது. நன்மைகளை புரிய வைக்க முடியாததால், ஓராண்டு தொடர் போராட்டத்திற்கு பின் பிரதமர் மோடி, தாமாகவே முன்வந்து கார்த்திகை தீபம் நாளன்று, வாபஸ் பற்றி அறிவித்தார். பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில், இந்த சட்டம் முழுமையாக ரத்து செய்யப்படும்.

'நீட்' தேர்வு மற்றும் வேளாண் சட்டங்களை ஒப்பிட முடியாது.நீட் தேர்வு பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு, ஒரு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தி உள்ளது. வெறும் அரசியல் ஆதாயத்திற்காக, எதிர்க்கட்சிகள் நீட் விஷயத்தை விடாமல் முயற்சிக்கின்றன. ஆண்டுதோறும் நீட் பிரச்னையை கையில் எடுத்து, அதன் வாயிலாக அரசியல் ஆதாயத்தை தேடும் தி.மு.க., அரசு, இந்த நாடகத்தை கைவிட வேண்டும்.


விருப்ப மனு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் விருப்ப மனு பெறும் பணி துவங்கிஉள்ளது. இந்த தேர்தலில், அதிக இடங்களில் போட்டியிட பா.ஜ., விரும்புகிறது. அ.தி.மு.க., கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை; கூட்டணி உறவு சுமூகமாக உள்ளது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (4+ 6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramamurthy N - Chennai,இந்தியா
22-நவ-202116:23:34 IST Report Abuse
Ramamurthy N இரு தலைமைக்கு வெற்றி கிடைக்குமா? அடுத்த தேர்தலில் பாஜகவிடம் கட்சியை அடமானம் வைத்துவிட்டார்களா? என்பது வரும் மாநகராட்சி தேர்தலில் தெரிந்துவிடும். ஜெயக்குமார் தவிர வேறுயாரும் அண்ணாமலைக்கு பதில் தருவதில்லை
Rate this:
Cancel
Gopal - Chennai,இந்தியா
22-நவ-202113:20:16 IST Report Abuse
Gopal கொடநாடு அடிமைகள் கூட்டத்தோடு உள்ள கூட்டணியை விட பாஜகவுக்கு விருப்பம் இல்லை. ''எல்லாவற்றிலும்'' ஒத்துமையாக இருந்தவர்கள். கொடநாடு கொலை,கொள்ளையைக்கூட கண்டிக்காத, விமர்சிக்காத நல்லவர்கள் பாஜகவினர். நடத்திய நூற்றுக்கணக்கான ரைடுகளைக்கூட வெளியில் விடாத ''நல்ல'' கொள்கை உள்ளவர்கள்.
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
22-நவ-202110:57:56 IST Report Abuse
பாமரன் இந்த விளங்காத பீஸை விடாமல் மார்க்கெட்டிங் பண்ணும் ஸார்வாள் கொஞ்சம் முன்னாள் தெருமுக்கு அமைச்சரு இவிங்க கட்சியை பத்தி நேத்து குடுத்த பேட்டி பற்றியும் நியூஸ் போடலாமே...???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X