பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் தேடி அலையும் போலீசார்: குழாயை சீரமைக்குமா நகராட்சி?

Added : நவ 21, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில், குடிநீர் வராததால் போலீசார் சிரமப்படுகின்றனர்.பொள்ளாச்சியில், பேரூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. சில்லிங் விற்பனை, கள்ள சாராயம், மதுபானங்கள் கடத்தல் உள்ளிட்டவை தடுக்க மதுவிலக்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஸ்டேஷனில் கடந்த, இரண்டு மாதங்களாக
 குடிநீர் தேடி அலையும் போலீசார்: குழாயை சீரமைக்குமா நகராட்சி?

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில், குடிநீர் வராததால் போலீசார் சிரமப்படுகின்றனர்.பொள்ளாச்சியில், பேரூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. சில்லிங் விற்பனை, கள்ள சாராயம், மதுபானங்கள் கடத்தல் உள்ளிட்டவை தடுக்க மதுவிலக்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஸ்டேஷனில் கடந்த, இரண்டு மாதங்களாக குடிநீர் வராததால் போலீசார் திணறுகின்றனர்.பழைய பஸ்ஸ்டாண்ட் குடிநீர் தொட்டி அருகே, போலீஸ் ஸ்டேஷனுக்கு பல ஆண்டுகளாக, நீர் வரத்து தடையின்றி கிடைத்தது. வரும் நீரை, போலீசார் பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில் கடந்த, இரண்டு மாதங்களுக்கு முன் குடிநீர் வராததால் நகராட்சியிடம், போலீசார் தெரிவித்துள்ளனர்.
'குழாய் உடைந்து இருக்கும் அல்லது வேறு பிரச்னை உள்ளதா என பார்த்து, சரி செய்து குடிநீர் வினியோகிக்கப்படும்,' என தெரிவித்துள்ளனர்.ஆனால், இதுவரை குடிநீர் குழாய் சரி செய்து குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. பலமுறை புகார் கொடுத்தும் நகராட்சி நிர்வாகம் சரி செய்யவில்லை. இதனால், லாரியில் விலைக்கு வாங்கி தண்ணீர் பயன்படுத்துகிறோம். அருகே உள்ள இருசக்கர வாகன ஸ்டாண்டிலில் இருந்து தண்ணீர் எடுத்து வர வேண்டியதுள்ளது, என, போலீசார் புலம்புகின்றனர்.எனவே, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, மதுவிலக்கு போலீசாருக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X