பொது செய்தி

தமிழ்நாடு

பாலத்தில் பகலில் பயணிக்கவே பயம்!

Added : நவ 21, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சிக்கான ரயில் வழித்தடங்கள் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட போது, ரயில்வே ஸ்டேஷன் மற்றும் யார்டு பகுதிகளும் மேம்படுத்தப்பட்டன. யார்டு பகுதியை அடுத்து, சி.டி.சி., காலனி, ராம் நகர், கோட்டூர் ரோடு செல்ல வசதியாக, சுரங்கப்பாலம் அமைக்கப்பட்டது.பாலம் திறக்கப்பட்ட போது, பகலிலேயே இருள் சூழந்து காணப்பட்டது. பொதுமக்கள் கோரிக்கையின் பேரில் மின்விளக்குகள்
 பாலத்தில் பகலில் பயணிக்கவே பயம்!

பொள்ளாச்சி:பொள்ளாச்சிக்கான ரயில் வழித்தடங்கள் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட போது, ரயில்வே ஸ்டேஷன் மற்றும் யார்டு பகுதிகளும் மேம்படுத்தப்பட்டன. யார்டு பகுதியை அடுத்து, சி.டி.சி., காலனி, ராம் நகர், கோட்டூர் ரோடு செல்ல வசதியாக, சுரங்கப்பாலம் அமைக்கப்பட்டது.பாலம் திறக்கப்பட்ட போது, பகலிலேயே இருள் சூழந்து காணப்பட்டது. பொதுமக்கள் கோரிக்கையின் பேரில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. ஓரிரு மாதங்களிலேயே சமூக விரோதிகள் மின்விளக்குகளை உடைத்து சேதப்படுத்தினர்.அதன் பின், மின் விளக்குகள் அமைக்கவோ, பாலத்தை பராமரிக்கவோ நடவடிக்கை எடுக்கவில்லை. பாலத்தை கடப்பவர்கள் இருள் சூழ்ந்திருப்பதால் பயத்துடனேயே பயணம் செய்கின்றனர். பகலிலேயே வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டுத்தான் செல்ல வேண்டியுள்ளது.பாதசாரிகள், பெண்கள் சுரங்கப்பாலத்தை பயன்படுத்தவே அச்சப்படுகின்றனர். இந்த பாலம், சமூக விரோத செயல்களுக்கு வசதியாக மாறியுள்ளது. மூன்று ஆண்டுகளாக இந்நிலை தொடர்கிறது. சுரங்கப்பாலத்தில் மின்விளக்குகள் அமைத்து, மக்களின் பாதுகாப்பான பயணத்துக்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X