பொது செய்தி

தமிழ்நாடு

'மா மழையால்' பொங்கும் உற்சாகம்: அதிகரிக்கும் வாழை சாகுபடி

Added : நவ 21, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில், பருவமழை நன்கு பெய்து, பாசன ஆதாரங்கள் மேம்பட்டதை அடுத்து, விவசாயிகள் வாழை சாகுபடியில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் நீண்ட கால பயிரான தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. தேங்காய் விலையில் நிலவும் நிலையற்ற தன்மையால் ஏற்படும் நஷ்டத்தை, ஊடுபயிர் சாகுபடியால் விவசாயிகள் ஓரளவு சமாளித்து வருகின்றனர்.அதில்,

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில், பருவமழை நன்கு பெய்து, பாசன ஆதாரங்கள் மேம்பட்டதை அடுத்து, விவசாயிகள் வாழை சாகுபடியில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் நீண்ட கால பயிரான தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. தேங்காய் விலையில் நிலவும் நிலையற்ற தன்மையால் ஏற்படும் நஷ்டத்தை, ஊடுபயிர் சாகுபடியால் விவசாயிகள் ஓரளவு சமாளித்து வருகின்றனர்.அதில், ஓராண்டு பயிரான வாழை சாகுபடி, விவசாயிகளுக்கு நன்கு கைகொடுக்கிறது. ஆனால், தென்னையும், வாழையும் சேர்த்து பயிரிட அதிக பாசன வசதி தேவைப்படும்.இந்தாண்டு, தென்மேற்கு பருவமழையும் நன்கு பெய்தது. தற்போது, வடகிழக்கு பருவமழையும் கனமழையாக பெய்தது. இதனால், வறட்சி நீங்கி பாசன ஆதாரங்கள் புத்துயிர் பெற்று, கோடைக்காலத்தை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.இதனால், தென்னையில் ஊடுபயிராக வாழை சாகுபடியை துவங்கியுள்ளனர். உள்ளூரில் நன்கு விலை போகும் ரஸ்தாளி, பூவன், கற்பூரவள்ளி, ரொபஸ்ட்ரா ரகங்களையும், அண்டை மாநிலமான கேரளாவில் கிராக்கி அதிகமுள்ள நேந்திரன், கேரள ரஸ்தாளி ரகங்களையும் அதிகம் நடவு செய்கின்றனர்.இந்த ரகங்கள், 10 மாதங்களில் பலனுக்கு வந்து விடும். ஒரு ஆண்டுக்குள் அறுவடை முடிந்து விடும்.ஆண்டு முழுக்க நல்ல விலை கிடைப்பதால், 18 மாதங்கள் சாகுபடி காலம் கொண்ட செவ்வாழை ரகத்தையும் சில விவசாயிகள் நடவு செய்துள்ளனர்.தென்னையை போலவே, வாழைக்கும் செட்டுநீர் அமைத்து பாசனம் அளிக்கின்றனர். இதனால், தற்போது வாழை வரத்துக்கு தென் மாவட்டங்களை நம்பியுள்ள நிலை, ஆறு மாதங்களுக்கு பிறகு மாறும், என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X