பொது செய்தி

தமிழ்நாடு

அறிவியல்சார் தேசிய மாநாடு: கட்டுரைகள் சமர்ப்பிக்க அழைப்பு

Added : நவ 21, 2021
Share
Advertisement
உடுமலை:அறிவியல் பரப்புரை மேற்கொள்ளும் தன்னார்வலர்கள் மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கான தேசிய மாநாடு, டில்லியில் நடக்கிறது.மத்திய அரசின், சி.எஸ்.ஐ.ஆர்.,- நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் கம்யூனிகேஷன் சார்பில் தேசிய அளவிலான மாநாடு நடத்தப்படுகிறது. அதாவது, டில்லி, தேசிய இயற்பியல் ஆய்வகத்தில், 'இந்திய சுதந்திர இயக்கம் மற்றும் அறிவியலின் பங்கு' என்ற தலைப்பில், வரும், 29,

உடுமலை:அறிவியல் பரப்புரை மேற்கொள்ளும் தன்னார்வலர்கள் மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கான தேசிய மாநாடு, டில்லியில் நடக்கிறது.மத்திய அரசின், சி.எஸ்.ஐ.ஆர்.,- நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் கம்யூனிகேஷன் சார்பில் தேசிய அளவிலான மாநாடு நடத்தப்படுகிறது. அதாவது, டில்லி, தேசிய இயற்பியல் ஆய்வகத்தில், 'இந்திய சுதந்திர இயக்கம் மற்றும் அறிவியலின் பங்கு' என்ற தலைப்பில், வரும், 29, 30 ஆகிய தேதிகளில் இம்மாநாடு நடக்கிறது.இதில், அறிவியல் பரப்புரை மேற்கொள்ளும் தன்னார்வலர்கள் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர்.இந்நிகழ்வு, ஆன்லைன் வாயிலாகவும் நடத்தப்பட உள்ளதால், பல்வேறு நாடுகளைச்சேர்ந்த விஞ்ஞானிகள், கருத்தாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர். அதன்படி, ஆறு அமர்வுகளை உள்ளடக்கி, மாநாடு நடத்தப்படவுள்ளது. அதில், விஞ்ஞானிகளின் பங்கு, கல்வி நிறுவனங்களின் இயக்கம், கொள்கை, திட்டமிடல் ஆகியவை விவாதிக்கப்படவுள்ளது.இம்மாநாட்டின் தலைப்புகளில் கட்டுரைகள், சுவரொட்டிகள், கவிதைகள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் ஆகியவற்றை megaconf.communicators@vigyanprasar.gov.in என்ற இமெயில் முகவரிக்கு, இன்றைக்குள் (22ம் தேதி) சமர்ப்பிக்கலாம். அதேபோல், http://swavigyan75.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி, பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு, வரும், 27 ம் தேதி, கடைசி நாளாகும். விவரம் அறிய, கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளரை, -8778201926 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X