சர்வதேச விதியை பின்பற்றாத நாடு: சீனாவுக்கு ராஜ்நாத் சிங் கண்டனம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
மும்பை-''கடல்பகுதி சட்டம் தொடர்பான ஐ.நா.,வின் பிரகடனத்தை பின்பற்றாமல் குறிப்பிட்ட சில நாடுகள் பொறுப்பில்லாமல் செயல்படுகின்றன,'' என, சீனாவின் பெயரைக் குறிப்பிடாமல், நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் கண்டனம் தெரிவித்தார்.அதிநவீன ஐ.என்.எஸ்., விசாகப்பட்டினம் என்ற போர்க் கப்பலை, கடற்படையுடன் இணைக்கும் நிகழ்ச்சி, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்று
 சர்வதேச விதியை பின்பற்றாத நாடு: சீனாவுக்கு ராஜ்நாத் சிங் கண்டனம்

மும்பை-''கடல்பகுதி சட்டம் தொடர்பான ஐ.நா.,வின் பிரகடனத்தை பின்பற்றாமல் குறிப்பிட்ட சில நாடுகள் பொறுப்பில்லாமல் செயல்படுகின்றன,'' என, சீனாவின் பெயரைக் குறிப்பிடாமல், நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் கண்டனம் தெரிவித்தார்.

அதிநவீன ஐ.என்.எஸ்., விசாகப்பட்டினம் என்ற போர்க் கப்பலை, கடற்படையுடன் இணைக்கும் நிகழ்ச்சி, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்று நடந்து.இணக்கமான சூழ்நிலைதென் சீன கடல்பகுதி முழுமைக்கும் நம் அண்டை நாடான சீனா உரிமை கோரி வருகிறது. சீனாவின் பெயரைக் குறிப்பிடாமல், இந்த நிகழ்ச்சியில், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:கடல் பகுதிகளை அனைத்து நாடுகளும் பயன்படுத்தி கொள்ளும் வகையில், ஐ.நா., கடல் சட்டப் பிரகடனம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால், சில குறிப்பிட்ட நாடுகள் சர்வதேச விதிகளை, சட்டங்களை மதிப்பதில்லை. தங்கள் குறுகிய நோக்கத்துக்காகவும், ஆதிக்கத்தை காட்டும் வகையிலும் சட்ட விதிகளை மீறி செயல்பட்டு வருகின்றன.அனைத்து நாடுகளும் பயன்படுத்தும், வர்த்தகம் செய்யும் வகையில் இந்தோ - பசிபிக் கடல் பகுதியில் அமைதியான, இணக்கமான சூழ்நிலை இருக்க வேண்டும் என, இந்தியா விரும்புகிறது. இந்த பிராந்தியத்தில் உள்ள மிக முக்கியமான நாடான இந்தியா, தன் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டு வருகிறது.பல லட்சம் கோடி ரூபாய்தற்போதைய சூழ்நிலையில, உலக நாடுகள் அனைத்தும் தங்கள் எல்லையைப் பாதுகாக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வரும் ஆண்டுகளில் ராணுவத் துறையில் பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடக்கும் சூழ்நிலை ஏற்படும்.நம் பலத்தை அதிகரித்து கொள்ளும் அதே வேளையில், இந்தத் துறையில் அதிக வர்த்தகம் செய்யும் வாய்ப்பும் நமக்கு உள்ளது. நம்மிடம் உள்ள திறமை, அரசின் கொள்கைகள், திட்டங்களை பயன்படுத்தி, கப்பல் கட்டும் துறையில் இந்தியா முன்னிலை பெற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

ஐ.என்.எஸ்., விசாகப்பட்டினம்என்னென்ன வசதிகள் இருக்கு?நம் கடற்படைக்கு 'டெஸ்ட்ராயர்' எனப்படும் எதிரி போர்க் கப்பல்களை அழிக்கக் கூடிய திறனுள்ள போர்க் கப்பல்களை உருவாக்கும் வகையில், 'புராஜக்ட் 15பி' என்ற திட்டத்தின்படி நான்கு போர்க் கப்பல்கள் தயாரிக்கப்படுகின்றன.அதில் முதலாவதான, ஐ.என்.எஸ்., விசாகப்பட்டினம் தற்போது கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்தம் 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த வகை போர்க்கப்பலின் அடுத்த கப்பல், 2023ல் சேர்க்கப்பட உள்ளது.

மீதமுள்ள இரண்டும், 2025க்குள் கடற்படையில் சேரும்.எதிரி ரேடார்களால் கண்டுபிடிக்க முடியாத, ஏவுகணைகள் வசதி இதில் உள்ளது. தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கையும், தரையில் இருந்து ஆகாயத்தில் உள்ள இலக்கையும் தாக்கக் கூடியது இந்த ஏவுகணை.நீர்மூழ்கி கப்பல்களை தகர்க்கக் கூடிய ஏவுகணைகளும் இதில் உள்ளன. அதிநவீன தகவல் தொடர்பு வசதிகள், மின்னணு முறையில் கண்காணிப்பு என, பல நவீன வசதிகள் இதில் உள்ளன.

அணு, உயிரி மற்றும் ரசாயன போர் முறைகளையும் சமாளிக்கும் திறனும் உள்ளது. மொத்தம் 163 மீ., நீளமும், 7,400 டன் எடையும் உள்ளது இந்த பிரமாண்ட போர்க் கப்பல், நம் கடற்படையின் வலிமையை மேலும் வலுவாக்கும்.நம் கடற்படையின் வடிவமைப்பு இயக்குனரகம் இதை வடிவமைத்துள்ளது. மும்பையில் உள்ள மசோகான் நிறுவனம் கட்டமைத்துள்ள இந்தக் கப்பலில் ஹெலிகாப்டர்களும் தரையிறங்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X