தொழில் முனைவோர்களான மாஜி பெண் நக்சலைட்டுகள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தொழில் முனைவோர்களான 'மாஜி' பெண் நக்சலைட்டுகள்

Added : நவ 21, 2021
Share
நாக்பூர்-மஹாராஷ்டிராவில் போலீசிடம் சரணடைந்த பெண் நக்சலைட்டுகள், சுய உதவிக் குழுவில் இணைந்து தொழில் துவங்கி அசத்தி வருகின்றனர்.மஹாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் போலீசிடம் சரணடையும் பெண் நக்சலைட்டுகளுக்காக, 'நவ்ஜீவன் உட்பதக் சங்' என்ற பெயரில் சுய உதவிக் குழு ஒன்றை, மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அன்கித் கோயல் துவக்கி வைத்தார்.இந்த திட்டம் நல்ல வரவேற்பை

நாக்பூர்-மஹாராஷ்டிராவில் போலீசிடம் சரணடைந்த பெண் நக்சலைட்டுகள், சுய உதவிக் குழுவில் இணைந்து தொழில் துவங்கி அசத்தி வருகின்றனர்.

மஹாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் போலீசிடம் சரணடையும் பெண் நக்சலைட்டுகளுக்காக, 'நவ்ஜீவன் உட்பதக் சங்' என்ற பெயரில் சுய உதவிக் குழு ஒன்றை, மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அன்கித் கோயல் துவக்கி வைத்தார்.இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு பலனாக, பெண் நக்சலைட்டுகள் பலர் போலீசாரிடம் சரணடைந்து, இந்த சுய உதவிக் குழுவில் இணைந்து பணிபுரிந்து வருகின்றனர்

.அப்படி சரணடைந்த பெண் நக்சலைட்டுகள் 10 பேர், இந்த சுய உதவிக் குழுவில் இணைந்து தற்போது தொழிலும் துவங்கி உள்ளனர். தரையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் பினாயிலை இவர்கள் தயாரித்து, விற்பனை செய்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X