பொது செய்தி

தமிழ்நாடு

நட்சத்திர பூங்காவில் காய்கறிகள் அறுவடை: தூய்மை பணியாளர்களின் பணி அபாரம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சி நட்சத்திர பூங்காவில் சாகுபடி செய்யப்பட்ட காய்கறிகள் அறுவடை செய்யப்பட்டது.பொள்ளாச்சி நகராட்சி ஜோதி நகர் நட்சத்திர பூங்கா, நுண்ணுயிர் உரமாக்கல் மையத்தில், வார்டுகளில் உள்ள குடியிருப்புகளில் உருவாகும் மக்கும், மக்காத கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன.வீடுகளில் சேகரமாகும் மக்கும் கழிவுகளை உரமாக்கி, அந்த உரத்தை கொண்டு பூங்காவில் இயற்கை
 நட்சத்திர பூங்காவில் காய்கறிகள் அறுவடை: தூய்மை பணியாளர்களின் பணி அபாரம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சி நட்சத்திர பூங்காவில் சாகுபடி செய்யப்பட்ட காய்கறிகள் அறுவடை செய்யப்பட்டது.பொள்ளாச்சி நகராட்சி ஜோதி நகர் நட்சத்திர பூங்கா, நுண்ணுயிர் உரமாக்கல் மையத்தில், வார்டுகளில் உள்ள குடியிருப்புகளில் உருவாகும் மக்கும், மக்காத கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன.வீடுகளில் சேகரமாகும் மக்கும் கழிவுகளை உரமாக்கி, அந்த உரத்தை கொண்டு பூங்காவில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்பட்டது.
அதில், நிலக்கடலை, சின்ன வெங்காயம், சேனைக்கிழங்கு, வெள்ளை பூசணி, சர்க்கரை வள்ளி கிழங்கு, தக்காளி, வெண்டைக்காய், கீரை வகைகள், மிளகாய், பப்பாளி மற்றும் வாழை சாகுபடி செய்யப்பட்டது.நகராட்சி சுகாதார ஆய்வாளர், மேற்பார்வையாளர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர், கடந்த ஆடி மாதம் காய்கறி சாகுபடிகளை மேற்கொண்டனர்.களை எடுத்தல், தண்ணீர் விடுதல், உரமிடுதல் போன்ற பணிகள் மேற்கொண்டு, சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை துாய்மை பணியாளர்கள் பராமரித்தனர். காய்கறிகள், நிலக்கடலை உள்ளிட்டவை அறுவடைக்கு தயாரானது. இதனையடுத்து, நட்சத்திர பூங்காவில் அறுவடை நிகழ்ச்சி நடந்தது.நகராட்சி கமிஷனர் தாணுமூர்த்தி தலைமை வகித்தார். நகர் நல அலுவலர் ராம்குமார் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர்கள் தர்மராஜ், ஜெயபார்வதி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.அறுவடை செய்யப்பட்ட பயிர்கள், பூங்காவில் உள்ள விநாயகர் சன்னதியில் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர், துாய்மை பணியாளர்கள், மக்களுக்கு வழங்கப்பட்டன.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:நட்சத்திர பூங்காவில் உள்ள நுண்உயிர் உரமாக்கல் மையத்தில், எட்டு வார்டுகளில் உள்ள, 5,082 வீடுகளில் இருந்து மக்கும், மக்காத குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.இங்கு தயாரிக்கப்படும் உரத்தை கொண்டு காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, சாகுபடி செய்யப்பட்ட காய்கறிகள், நிலக்கடலை, சின்ன வெங்காயம் உள்ளிட்டவை அறுவடை செய்யப்பட்டன.
மொத்தம், 50 கிலோ எடையுள்ள காய்கறிகள் அறுவடை செய்யப்பட்டு, துாய்மை பணியாளர்கள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உருவாகும் மக்கும், மக்காத கழிவுகளை பிரித்து தர வேண்டும். இதுபோன்று காய்கறி தோட்டங்களை ஒவ்வொருவரும் தங்களது வீட்டு வளாகத்தில் அமைத்து, உற்பத்தி செய்ய முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X