சில வரி செய்திகள்

Added : நவ 21, 2021
Share
Advertisement
சீன திட்டத்திற்கு எதிர்ப்புகராச்சி: நம் அண்டை நாடான பாகிஸ்தானில் பொருளாதார வழிப் பாதை அமைக்கும் திட்டத்தை சீனா அமல்படுத்தி வருகிறது. இதன் கட்டுமான பணிகள் நடந்து வருவதால், குவாடார் துறைமுக பகுதியில் உள்ள பல இடங்களில் போலீஸ் சோதனைகள் நடக்கின்றன. அந்த பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடும், மின்சார வினியோக பாதிப்பும் ஏற்படுகின்றன. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிராக
 சில வரி செய்திகள்

சீன திட்டத்திற்கு எதிர்ப்பு

கராச்சி: நம் அண்டை நாடான பாகிஸ்தானில் பொருளாதார வழிப் பாதை அமைக்கும் திட்டத்தை சீனா அமல்படுத்தி வருகிறது. இதன் கட்டுமான பணிகள் நடந்து வருவதால், குவாடார் துறைமுக பகுதியில் உள்ள பல இடங்களில் போலீஸ் சோதனைகள் நடக்கின்றன. அந்த பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடும், மின்சார வினியோக பாதிப்பும் ஏற்படுகின்றன. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிராக குவாடாரில் போராட்டங்கள் வெடித்துள்ளன. மனித உரிமை ஆர்வலர்கள், மீனவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

'பூஸ்டர் டோஸ்' முன்பதிவு

லண்டன்: பிரிட்டனில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள், முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதற்கிடையே 'பூஸ்டர் டோஸ்' எனப்படும், கூடுதல் டோஸ்களை மக்களுக்கு வழங்கவும், பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்த பூஸ்டர் டோஸ்களை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பூஸ்டர் டோசை செலுத்திக்கொள்ள, இன்று முதல் முன்பதிவு செய்யலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிதுவேனியாவுக்கு கண்டனம்

பீஜிங்: கிழக்காசிய நாடான தைவானை, சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. இதனால், தைவான் நிர்வாகத்துடன் நட்பு பாராட்டும் நாடுகளையும், சீனா பகைத்து வருகிறது. ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் தைவான் நிர்வாகம் தனக்கான தனி துாதரக அலுவலகத்தை திறந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்துள்ள சீன அரசு, லிதுவேனியா அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த நாட்டுடனான துாதரக உறவு களையும் குறைப்பதாகவும் அறிவித்துள்ளது

.மாடல் அழகி விடுதலை

லாகூர்: பாகிஸ்தானில் 2018ம் ஆண்டு, 'ஹெராயின்' போதைப் பொருளை கடத்திச் செல்ல முயன்ற செக் குடியரசு நாட்டை சேர்ந்த மாடல் அழகி தெரேசா லுஸ்கோவா கைது செய்யப்பட்டார். 2019ல், அவருக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவரின் மேல்முறையீட்டு மனு, லாகூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதை சமீபத்தில் விசாரித்த நீதிமன்றம், அவரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது. இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

படகு கவிழ்ந்து 75 அகதிகள் பலி

ரோம்: ஆப்ரிக்க மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள், ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர். இதற்காக அவர்கள் கடலில் ஆபத்தான முறையில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் லிபியா நாட்டின் வடக்கில் அமைந்துள்ள மத்திய தரைக்கடலில் நேற்று முன்தினம் அகதிகளுடன் சென்ற படகு, கடலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில், 75 அகதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 15 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர். ----------------------

பாக்., தலைமை நீதிபதி மறுப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரான அலி அகமது குர்த், பாக்., நீதித் துறை, இதர அமைப்புகள் தரும் அழுத்தத்தின்கீழ் இயங்கி வருவதாக சமீபத்தில் கூறினார். இந்நிலையில் அதை பாக்., உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குல்சார் அகமது நேற்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவர் கூறுகையில், “தீர்ப்புகளை இப்படிதான் வழங்க வேண்டும் என யாரும் எனக்கு கூறியதில்லை. பிறர் கூறியதை கேட்டு நான் தீர்ப்பை வழங்கியதும் இல்லை,” என்றார்.-----------'

ஹேக்' செய்யப்பட்ட இணையதளம்

டெஹ்ரான்: மேற்காசிய நாடான ஈரானில் 'மஹான் ஏர்' என்ற தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் இணையதள பக்கம் நேற்று 'ஹேக்கிங்' செய்யப்பட்டது. இதை அந்த நிறுவனம் அறிக்கை வாயிலாக உறுதிபடுத்தியது. எனினும் இந்த சம்பவத்தால் விமான சேவைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. ---------------

சூடானில் அப்துல்லா ஆட்சி?

கெய்ரோ: ஆப்ரிக்க நாடான சூடானில் கடந்த மாதம் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. பிரதமர் அப்துல்லா ஹாம்டோக் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து, ராணுவத்திற்கும் அரசியல் தலைவர்களுக்கும் இடையே தொடர்ந்து பேச்சு நடந்து வந்தது. இந்நிலையில், பேச்சில் தீர்வு எட்டப்பட்டுள்ளதால், அப்துல்லாவுக்கு மீண்டும் பிரதமர் பதவியை வழங்க ராணுவம் முடிவு செய்துள்ளது. கைது செய்யப்பட்ட தலைவர்கள் அனைவரையும் விடுவிக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளது.-------------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X