பொது செய்தி

தமிழ்நாடு

மண் வளத்துக்கு பசுந்தாள் உரம் மழைக்கு பின் பணிகள் தீவிரம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை சுற்றுவட்டாரத்தில், வடகிழக்கு பருவமழை சீசனில், பெய்த தொடர் மழையால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.விளைநிலங்களில், மழை நீர் வடியாமல் தேங்கியுள்ளது. வழக்கமாக, பருவமழையை ஆதாரமாக கொண்டு, பல்வேறு மானாவாரி சாகுபடிகள் மேற்கொள்ளப்படும். மானாவாரி சாகுபடிக்கும், அடுத்த பி.ஏ.பி., பாசன சீசனில், மக்காச்சோளம் சாகுபடி செய்யவும், மண் வளத்தை மேம்படுத்துவதற்கான
 மண் வளத்துக்கு பசுந்தாள் உரம் மழைக்கு பின் பணிகள் தீவிரம்

உடுமலை:உடுமலை சுற்றுவட்டாரத்தில், வடகிழக்கு பருவமழை சீசனில், பெய்த தொடர் மழையால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.விளைநிலங்களில், மழை நீர் வடியாமல் தேங்கியுள்ளது. வழக்கமாக, பருவமழையை ஆதாரமாக கொண்டு, பல்வேறு மானாவாரி சாகுபடிகள் மேற்கொள்ளப்படும். மானாவாரி சாகுபடிக்கும், அடுத்த பி.ஏ.பி., பாசன சீசனில், மக்காச்சோளம் சாகுபடி செய்யவும், மண் வளத்தை மேம்படுத்துவதற்கான பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். தொடர் சாகுபடியால், மண் வளம் பாதித்துள்ளதை தவிர்க்க, சாணம் உட்பட தொழு உரங்களை அடியுரமாக இடுகின்றனர். சணப்பை, கொள்ளு போன்ற பசுந்தாள் உரங்களுக்கான பயிர்களை விதைப்பு செய்துள்ளனர். இதில், சணப்பை பூ விட்டதும், அப்படியே விளைநிலத்தில், மடக்கி உழவு செய்கின்றனர். இதனால், மண் வளம் அதிகரித்து, கூடுதல் விளைச்சல் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X