காலியாக உள்ள பணியிடங்கள்: மின்நுகர்வோர் பாதிப்பு

Added : நவ 21, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை மின்வாரிய பிரிவு அலுவலகங்களில், காலியாகவுள்ள ஒயர்மேன் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழக மின் வாரியத்தில், களப்பிரிவு, கணக்கீட்டு பிரிவு, வருவாய் பிரிவு, தொழில்நுட்ப பிரிவு என, மொத்த பிரிவுகளிலும் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையை விட குறைவாகவே பணியாளர்கள் உள்ளனர்.அதில், பல ஆண்டுகளாக, 'ஒயர் மேன்' மற்றும்

உடுமலை:உடுமலை மின்வாரிய பிரிவு அலுவலகங்களில், காலியாகவுள்ள ஒயர்மேன் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழக மின் வாரியத்தில், களப்பிரிவு, கணக்கீட்டு பிரிவு, வருவாய் பிரிவு, தொழில்நுட்ப பிரிவு என, மொத்த பிரிவுகளிலும் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையை விட குறைவாகவே பணியாளர்கள் உள்ளனர்.அதில், பல ஆண்டுகளாக, 'ஒயர் மேன்' மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், மின் நுகர்வோர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பழுது நீக்கம், பராமரிப்பு, கண்காணிப்பு மற்றும் தெரு விளக்குகள் பராமரிப்பு ஆகிய பணிகள் முடங்கி விடுகின்றன.அவ்வகையில், உடுமலை, திருப்பூர் உள்ளிட்ட மின் பகிர்மான வட்டத்தில், ஒவ்வொரு பிரிவு அலுவலகங்களிலும், 'போர்மென்கள்', தங்களது வசதிக்காக, தற்காலிக ஊழியர்களை நியமித்துக்கொள்கின்றனர்.அவர்கள், மின்வாரிய வரையறை மற்றும் கட்டுப்பாட்டுக்குள் நேரடியாக வருவது கிடையாது. எனவே, பிரிவு அலுவலகங்களில், காலியாக உள்ள ஒயர்மேன் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை எழுந்துள்ளது.மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'பிரிவு அலுவலகங்களில், ஒயர்மேன் மற்றும் உதவியாளர் பணியிடங்கள், காலியாக உள்ளது. நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்கள், பணிக்கு வராமல் இருந்தால் பழுது நீக்கும் பணி தடைபடுகிறது'.'குறிப்பாக, வீட்டு மின் இணைப்பு பழுதுகள் சீரமைத்தல், விவசாய மின் இணைப்பு சீரமைப்பு பணி பாதிக்கப்படுகிறது. களப்பணியாளர் பற்றாக்குறையால், மின் நுகர்வோர் மட்டுமின்றி, மின் வாரியமும் பாதிக்கிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X