பொது செய்தி

இந்தியா

போலீஸ் தொழில்நுட்ப அமைப்பு பிரதமர் மோடி வலியுறுத்தல்..

Added : நவ 21, 2021
Share
Advertisement
லக்னோ-''மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் போலீஸ் தொழில்நுட்ப அமைப்பு உருவாக்க வேண்டும்,'' என, பிரதமர்நரேந்திர மோடி வலியுறுத்தினார்.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பெருமைதலைநகர் லக்னோவில் நடந்த அனைத்து மாநில டி.ஜி.பி.,க்கள், ஐ.ஜி.,க்கள் மாநாடு நேற்று முடிவடைந்தது; இதில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:போலீஸ் துறை

லக்னோ-''மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் போலீஸ் தொழில்நுட்ப அமைப்பு உருவாக்க வேண்டும்,'' என, பிரதமர்நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பெருமைதலைநகர் லக்னோவில் நடந்த அனைத்து மாநில டி.ஜி.பி.,க்கள், ஐ.ஜி.,க்கள் மாநாடு நேற்று முடிவடைந்தது; இதில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:போலீஸ் துறை தெடர்பான அனைத்து சம்பவங்களையும் தொகுக்க வேண்டும். அதை போலீஸ் பணியில் புதிதாக சேர்பவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் மனதில் போலீஸ் பணி மீது பெரும் மதிப்பும், பெருமையும் ஏற்படும்.

நாம் நவீன தொழில்நுட்ப காலத்தில் வாழ்கிறோம். மக்களின் அன்றாட வாழ்க்கையில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. கொரோனா தடுப்பூசி போடும் பணியில் 'கோவின்' இணையதளம் முக்கிய பங்காற்றி வருகிறது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன. அதனால் போலீஸ் துறையும், புதிய தொழில்நுட்பங்களை தத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

பாராட்டு

மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் போலீஸ் தொழில்நுட்ப அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை போலீஸ் துறைக்கு பயன்படுத்துவது பற்றி அந்த அமைப்பு ஆய்வு செய்ய வேண்டும். கொரோனா பரவல் காலத்தில், மக்களுக்கு போலீசார் ஆற்றிய பணிகள் பாராட்டத்தக்கது.இவ்வாறு பிரதமர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X