குளிர் சாதன பெட்டிக்குள் 7 மணி நேரம் இருந்து உயிருடன் வந்தவரால் பரபரப்பு

Updated : நவ 22, 2021 | Added : நவ 21, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
மொராதாபாத்-உத்தர பிரதேச மருத்துவமனையில் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட நபர், குளிர்சாதன பெட்டிக்குள் ஏழு மணி நேரம் இருந்த பின், உயிருடன் மீண்டு வந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தீவிர சிகிச்சைஇங்குள்ள மொராதாபாத் மாவட்டத்தில் சமீபத்தில் ஸ்ரீகேஷ் குமார் என்ற எலக்ட்ரீஷியன் மீது, பைக் வேகமாக வந்து
 குளிர் சாதன பெட்டிக்குள் 7 மணி நேரம் இருந்து உயிருடன் வந்தவரால் பரபரப்பு

மொராதாபாத்-உத்தர பிரதேச மருத்துவமனையில் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட நபர், குளிர்சாதன பெட்டிக்குள் ஏழு மணி நேரம் இருந்த பின், உயிருடன் மீண்டு வந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தீவிர சிகிச்சைஇங்குள்ள மொராதாபாத் மாவட்டத்தில் சமீபத்தில் ஸ்ரீகேஷ் குமார் என்ற எலக்ட்ரீஷியன் மீது, பைக் வேகமாக வந்து மோதியது. படுகாயங்களுடன் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரின் உடல், மருத்துவமனையில் உள்ள பிணவறையில் குளிர்சாதன பெட்டிக்குள் வைக்கப்பட்டது.ஸ்ரீகேஷின் குடும்பத்தினர் அவரது உடலை அடையாளம் பார்த்து ஆவணத்தில் கையெழுத்திட்டனர்.

அப்போது ஸ்ரீகேஷின் உடலில் சில அசைவுகள் தென்பட்டன. இதைப் பார்த்த அவரது குடும்பத்தினர் கூச்சலிட்டு அனைவரையும் அழைத்தனர்.உடனடியாக அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதய துடிப்பு இல்லைஇதுகுறித்து தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சிவ் சிங் கூறியதாவது:அதிகாலை 3:00 மணிக்கு ஸ்ரீகேஷை பரிசோதித்தபோது அவருக்கு இதய துடிப்பு இல்லை. பின் அவர் உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.

எனினும் ஏழு மணி நேரம் குளிர் பெட்டிக்குள் இருந்த அவர் காலையில் உயிருடன் இருந்துள்ளார். இதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இப்போது அந்த நபரின் உயிரை காப்பாற்றுவதே எங்கள் கடமை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
22-நவ-202119:17:48 IST Report Abuse
D.Ambujavalli ஆண்டவனுக்கு நன்றி நல்ல காலமாக ' உடல் ' அறுக்க ஆரம்பிக்குமுன் அசைவைக் கண்டுபிடித்து விட்டார் நல்ல அரசு, ரொம்ப நல்ல மருத்துவர்கள்
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
22-நவ-202118:49:24 IST Report Abuse
வெகுளி PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
22-நவ-202118:45:45 IST Report Abuse
வெகுளி மீட்பர் ஸ்ரீகேஷ் குமார் உயிர்த்தெழுந்தததாக கூறப்படுவது பகுத்தறிவா என்று தெரியல....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X