பொது செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சி மாவட்டம் அறிவிப்புக்கு...மனம் அறிந்தால் மகிழ்ச்சி!முதல்வர் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு

Added : நவ 21, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு, மாவட்டம் அறிவிக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால கனவாக உள்ளது. கோவை வரும் தமிழக முதல்வர், இதற்கான அறிவிப்பை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.'தென்னை நகரம்' என்ற அழைக்கப்படும் பொள்ளாச்சி, ஆங்கிலயேர் காலத்தில், 1857ல் சப் - கலெக்டர் தலைமையில் இயங்கும் வருவாய் கோட்டமாக இருந்தது.நான்கு தாலுகாக்களை உள்ளடக்கிய

பொள்ளாச்சி:பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு, மாவட்டம் அறிவிக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால கனவாக உள்ளது. கோவை வரும் தமிழக முதல்வர், இதற்கான அறிவிப்பை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.'தென்னை நகரம்' என்ற அழைக்கப்படும் பொள்ளாச்சி, ஆங்கிலயேர் காலத்தில், 1857ல் சப் - கலெக்டர் தலைமையில் இயங்கும் வருவாய் கோட்டமாக இருந்தது.நான்கு தாலுகாக்களை உள்ளடக்கிய பொள்ளாச்சி வருவாய் கோட்டமாக திகழ்ந்தது.

கடந்த, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 6,37,091 மக்கள் தொகை கொண்ட பெரிய வருவாய் கோட்டமாக உள்ளது. தற்போது, மக்கள் தொகை வளர்ச்சி, குடியிருப்புகள் அதிகரிப்பு காரணமாக, பத்து லட்சம் மக்கள் தொகை உள்ளது. முற்றிலும் விவசாயம் சார்ந்த பகுதியாக பொள்ளாச்சி விளங்குகிறது. சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக உள்ள பொள்ளாச்சி, சினிமா பட கலைஞர்களுக்கு சொர்க்க பூமியாக உள்ளது. தென்னை மற்றும் அது சார்ந்த பொருட்கள் உற்பத்தி செய்வதில் மாநிலத்தில் முதன்மையான பகுதியாக விளங்குகிறது.

வால்பாறை பகுதியை சேர்ந்த மக்கள், நீண்டதுாரம் பயணம் செய்து கோவை கலெக்டரை சந்திக்க வேண்டும். அவர்கள் ஒரு நாள் வேலைக்கு செல்லாமல், கோவை செல்ல வேண்டும்.கடைக்கோடி கிராமங்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் முழுமையாக சென்று சேருவதில்லை. மாவட்ட நிர்வாக கவனத்துக்கு செல்லாமல், பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு எட்டப்படாமல் உள்ளது.இதுபோன்று பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை, உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாக்களை உள்ளடங்கிய, புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால கனவாக உள்ளது.கடந்த, பத்து ஆண்டுகாலமாக அ.தி.மு.க., ஆட்சியில் இருந்த போதும் ஒவ்வொரு சட்டசபை கூட்டத்தொடரிலும் பொள்ளாச்சி மாவட்டம் அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பை எதிர்பார்த்து மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

சமீபத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களை காட்டிலும், பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க அனைத்து சிறப்புகளும் உள்ளது. மக்கள் தொகை, பரப்பு போன்றவையும் உள்ளது. அதற்கான, கட்டமைப்புகள் இருந்தும், பொள்ளாச்சி மாவட்ட அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சூழலில், மீண்டும் இந்த கோரிக்கை எழுந்துள்ளது. சமீபத்தில் பொள்ளாச்சி, நெகமம் பகுதிக்கு வந்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியிடம், பொள்ளாச்சி பகுதி வளர்ச்சி சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. பொள்ளாச்சியை மாவட்டமாக உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினர்.முதல்வர் ஸ்டாலின், இரண்டு நாட்கள் பயணமாக கோவை வந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
கோவைக்கான திட்டங்களை அறிவிக்க உள்ளதாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அதில், பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் உருவாக்கும் அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும், மக்களிடையே மேலோங்கியுள்ளது. கோவை மாவட்டத்தில், தி.மு.க., ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில், மக்களின் மனம் அறிந்து, அதற்கேற்ப அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X