பொது செய்தி

தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு பயிற்சி அரசு பள்ளியில் ஆசிரியர்கள் அசத்தல்

Added : நவ 21, 2021
Share
Advertisement
ஆனைமலை:ஆனைமலை அடுத்த, பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கிராமப்புற இளைஞர்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான பயிற்சி வகுப்பை துவங்கியுள்ளனர்.ஆனைமலை அடுத்த பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், கடந்த மூன்று வாரங்களாக, முன்னாள் மாணவர்கள் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான பயிற்சி வகுப்பை
 டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு பயிற்சி அரசு பள்ளியில் ஆசிரியர்கள் அசத்தல்

ஆனைமலை:ஆனைமலை அடுத்த, பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கிராமப்புற இளைஞர்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான பயிற்சி வகுப்பை துவங்கியுள்ளனர்.ஆனைமலை அடுத்த பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், கடந்த மூன்று வாரங்களாக, முன்னாள் மாணவர்கள் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான பயிற்சி வகுப்பை துவங்கியுள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை காலை, 10:00 மணி முதல் 1:00 மணி வரையில் பயிற்சி வகுப்பு நடக்கிறது. பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு வருமாறு, ஆசிரியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.பள்ளி தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி மற்றும் தமிழாசிரியர் பாலமுருகன் கூறியதாவது: முன்னாள் மாணவர்கள், கிராமப்புற இளைஞர்கள் மாணவிகள் என, பத்து பேர் தற்போது பயிற்சிக்காக வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், காவலர் தேர்வுக்காக பயிற்சி வகுப்புகள் நடத்தினோம்.தற்போது, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 4 மற்றும் வி.ஏ.ஓ., தேர்வுக்காக பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. திவான்சாபுதுார் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட, பல பள்ளிகளில் இருந்து வரும் ஆசிரியர்கள், மாணவர்களுக்காக பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றனர்.மாணவர்களுக்காக, சமூகவலைதளங்கள் வாயிலாக, பாடங்கள், நடப்பு நிகழ்வுகள், தேர்வுகள் குறித்து தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. மே மாதம் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடக்கவுள்ளது. மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X