எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

புதிய வளர்ச்சி குழும தலைவர் நியமனம்: வீட்டுவசதி துறையில் புதிய குழப்பம்

Updated : நவ 22, 2021 | Added : நவ 21, 2021
Share
Advertisement
சென்னை-புதிதாக உருவாக்கப்பட உள்ள மதுரை, கோவை, ஓசூர் பெருநகர வளர்ச்சி குழுமங்களின் தலைவர் பதவிகளுக்கு, யார் யாரை நியமிப்பது என்பதில், வீட்டுவசதி துறையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., 1974ல் ஏற்படுத்தப்பட்டது. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக வருவோர், இதன் தலைவர் பொறுப்பையும் கவனித்து வருகின்றனர்.துணை தலைவர்,
புதிய வளர்ச்சி குழும தலைவர் நியமனம்:  வீட்டுவசதி துறையில் புதிய குழப்பம்

சென்னை-புதிதாக உருவாக்கப்பட உள்ள மதுரை, கோவை, ஓசூர் பெருநகர வளர்ச்சி குழுமங்களின் தலைவர் பதவிகளுக்கு, யார் யாரை நியமிப்பது என்பதில், வீட்டுவசதி துறையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., 1974ல் ஏற்படுத்தப்பட்டது. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக வருவோர், இதன் தலைவர் பொறுப்பையும் கவனித்து வருகின்றனர்.துணை தலைவர், உறுப்பினர் செயலர் பதவிகள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளால் நிரப்பப்படுகின்றன. இவர்களுக்கு அடுத்த படியாக சீப் பிளானர், சீனியர் பிளானர் பதவிகள் உண்டு.

இந்நிலையில், இரண்டாம் நிலை நகரங்களில் ஏற்பட்டு வரும் நகர்ப்புற வளர்ச்சியை ஒருங்கிணைக்கும் வகையில், புதிய பெருநகர வளர்ச்சி குழுமங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.அதை ஏற்று, மதுரை பெருநகர வளர்ச்சி குழுமம்; கோவை - திருப்பூர் பெருநகர வளர்ச்சி குழுமம்; ஓசூர் நகரப்புற வளர்ச்சி குழுமம் ஆகியவற்றை ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான பூர்வாங்க பணிகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை துவக்கி உள்ளது. இது குறித்து, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது: சி.எம்.டி.ஏ.,வில் உள்ளது போல, புதிய பெருநகர் வளர்ச்சி குழுமங்களிலும், நிர்வாக அமைப்பை ஏற்படுத்துவதே வழக்கமான நடைமுறை. ஆனால், சி.எம்.டி.ஏ., அளவுக்கு இந்த குழுமங்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சி.எம்.டி.ஏ., போல, இந்த புதிய குழுமங்களுக்கு தலைவர் பதவியை அமைச்சருக்கு ஒதுக்குவதா; ஐ.ஏ.எஸ்., நிலைக்கு மாற்றுவதா என்பதில், அதிகாரிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இல்லாவிட்டால், வாரிய தலைவர் போல, அரசு யாரை வேண்டுமானாலும் நியமிக்க வழி வகை செய்யலாமா எனவும், அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். நகர், ஊரமைப்பு சட்டப்படி, இதற்கான புதிய பதவிகளுக்கு உரிய முக்கியத்துவம் தர வேண்டும். இது போன்ற முக்கிய பதவிகள், அதிகாரிகள் நிலைக்கு செல்லாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X