பொது செய்தி

தமிழ்நாடு

சி.எம்.டி.ஏ., எல்லை விரிவாக்கம் 25ல் செங்கல்பட்டில் கருத்து கேட்பு

Added : நவ 21, 2021
Share
Advertisement
சென்னை--சி.எம்.டி.ஏ., எல்லையை விரிவாக்கம் செய்வது குறித்த கருத்து கேட்பு கூட்டம், செங்கல்பட்டில் 25ம் தேதி நடக்க உள்ளது.சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., நிர்வாக எல்லை பரப்பு, தற்போது 1,189 சதுர கி.மீ.,யாக உள்ளது. இதில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சில பகுதிகள் இடம் பெற்றுள்ளன. இப்பகுதிக்கு அப்பால் ஏற்பட்டுள்ள நகர்ப்புற வளர்ச்சியை

சென்னை--சி.எம்.டி.ஏ., எல்லையை விரிவாக்கம் செய்வது குறித்த கருத்து கேட்பு கூட்டம், செங்கல்பட்டில் 25ம் தேதி நடக்க உள்ளது.

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., நிர்வாக எல்லை பரப்பு, தற்போது 1,189 சதுர கி.மீ.,யாக உள்ளது. இதில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சில பகுதிகள் இடம் பெற்றுள்ளன. இப்பகுதிக்கு அப்பால் ஏற்பட்டுள்ள நகர்ப்புற வளர்ச்சியை கருத்தில் வைத்து, 1,189 சதுர கி.மீ.,யாக உள்ள பரப்பளவை, 8,878 சதுர கி.மீ.,யாக விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.இதற்கான ஒப்புதலை, தமிழக அரசு 2018ல் வழங்கியது.

இதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலுார் மாவட்டங்களில் இருந்து 1,709 கிராமங்களை சி.எம்.டி.ஏ., எல்லைக்குள் சேர்க்கப்பட உள்ளன.இது குறித்து, அந்தந்த கிராம மக்களின் கருத்துகளை பெற்று அனுப்ப, மாவட்ட நிர்வாகங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில், இந்த நான்கு மாவட்ட நிர்வாகங்களும், தனித்தனியாக கருத்து கேட்பு பணிகளை துவக்கி உள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்துக்கான கருத்து கேட்பு கூட்டம், வரும் 25ல் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி கூட்ட அரங்கில் நடக்க உள்ளது.பொதுமக்கள், வல்லுனர்கள், தன்னார்வ அமைப்புகள் இதில் பங்கேற்று, விரிவாக்கம்குறித்த தங்கள் கருத்துகளை தெரிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X