பொது செய்தி

தமிழ்நாடு

விதிகளை பின்பற்றி விதை விற்பனை செய்யணும்! விதை ஆய்வுத்துறையினர் எச்சரிக்கை

Added : நவ 21, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை பகுதியில், 'விதைச்சட்டத்தின் கீழ், தகவல் பலகை பராமரிக்காத விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என விதை ஆய்வுத்துறை அதிகாரிகள் ஆய்வின் போது எச்சரிக்கை விடப்பட்டது.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில், 50க்கும் மேற்பட்ட, தனியார் விதை விற்பனை நிலையங்கள் உள்ளன.இதில், உடுமலை பகுதியிலுள்ள, விற்பனை நிலையங்களை, கோவை விதை ஆய்வு துணை
 விதிகளை பின்பற்றி விதை விற்பனை செய்யணும்! விதை ஆய்வுத்துறையினர் எச்சரிக்கை

உடுமலை:உடுமலை பகுதியில், 'விதைச்சட்டத்தின் கீழ், தகவல் பலகை பராமரிக்காத விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என விதை ஆய்வுத்துறை அதிகாரிகள் ஆய்வின் போது எச்சரிக்கை விடப்பட்டது.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில், 50க்கும் மேற்பட்ட, தனியார் விதை விற்பனை நிலையங்கள் உள்ளன.இதில், உடுமலை பகுதியிலுள்ள, விற்பனை நிலையங்களை, கோவை விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் தலைமையிலான குழுவினர், திடீர் ஆய்வு செய்தனர்.இது குறித்து, விதை ஆய்வு துணை இயக்குனர் கூறியதாவது: உரிமம் பெற்று விற்பனை செய்யும், அனைத்து விதை விற்பனையாளர்களும், கொள்முதலின் போது, தேர்ச்சி பெற்ற விதை முளைப்புத்திறன் அறிக்கையுடன், விதை வாங்க வேண்டும்.ஒவ்வொரு தனியார் விதை உற்பத்தியாளர்களும், தங்களின் விதை ரகங்களுக்கு, விதைச்சான்று இயக்குனர் அலுவலகத்தில், பதிவு எண் பெறுவது அவசியமாகும்.பதிவு எண், முளைப்புத்திறன் அறிக்கை இல்லாமல், விற்பனை செய்தால், விதைச்சட்டத்தின் படி, விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு, தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.விற்பனை நிலையங்களில், காலாவதியான விதை குவியல்களை, தனி பதிவேட்டில், பதிவு செய்து தனியாக பராமரிக்க வேண்டும். உரிமம்; விற்பனை பட்டியல்; விதை விபர அட்டை இல்லாமல், விதை சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல், 'வாட்ஸ் ஆப்' மற்றும் பிற இணைய தளங்கள் வாயிலாக விற்பனை செய்யும் விதைகளை, விவசாயிகள் வாங்கக்கூடாது. இவ்வாறு, தெரிவித்தார்.ஆய்வின் போது, தகவல் பலகையை முறையாக பராமரிக்காமல், விற்பனை ரசீதில், விவசாயிகளிடம் கையெழுத்து பெறாமல், இருந்த உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.விவசாயிகளே கவனம்தனியார் விதை விற்பனை நிலையங்களில், விதை வாங்கும் விவசாயிகள், விபர அட்டையுடன், விற்பனை ரசீது ஒத்து இருக்கிறதா என, கவனித்து வாங்க வேண்டும்.அவ்வாறு, வாங்கும் விதையின் ரசீது, விற்பனை பட்டியலை சாகுபடி காலம் முடியும் வரை, பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.விற்பனை பட்டியல் வழங்காதது மற்றும் விற்பனை செய்த விதை, நாற்றுகளுக்கு போலி விற்பனை பட்டியல் வழங்கி இருந்தால், விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம்.இத்தகைய விதிமீறலில் ஈடுபடும் விற்பனையாளர்கள் மீது, விதை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், விதை ஆய்வு துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X