விடுதலை பொன்விழா: கொண்டாட காங்., திட்டம் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

விடுதலை பொன்விழா: கொண்டாட காங்., திட்டம்

Added : நவ 21, 2021
Share
சென்னை-'வங்கதேசம் விடுதலை பெற்ற, 50வது ஆண்டு பொன்விழா, காங்கிரஸ் முன்னாள் ராணுவத்தினர் பிரிவு சார்பில், நாடு முழுதும் கொண்டாடப்பட உள்ளது' என்று தமிழக காங்கிரஸ் தலைவர்அழகிரி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: கடந்த ௧௯௭௧ல் நடந்த வங்கதேச விடுதலை போரில், அன்றைய பிரதமர் இந்திரா தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் ஆற்றிய பணிகள், வங்கதேச வரலாற்றில் இருந்து பிரிக்க

சென்னை-'வங்கதேசம் விடுதலை பெற்ற, 50வது ஆண்டு பொன்விழா, காங்கிரஸ் முன்னாள் ராணுவத்தினர் பிரிவு சார்பில், நாடு முழுதும் கொண்டாடப்பட உள்ளது' என்று தமிழக காங்கிரஸ் தலைவர்அழகிரி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: கடந்த ௧௯௭௧ல் நடந்த வங்கதேச விடுதலை போரில், அன்றைய பிரதமர் இந்திரா தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் ஆற்றிய பணிகள், வங்கதேச வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாதவை. வங்கதேச அரசியலில், பல ஏற்றத்தாழ்வுகள் இருந்த போதிலும், பழைய கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு உறுதியான ஆதரவளித்த இந்திராவை, வங்கதேச மக்கள் எப்போதும் நேசித்து வந்துள்ளனர்.

மேற்கு பாகிஸ்தானுடன் நடந்த ௧௩ நாள் போரில், மிகப்பெரிய வெற்றியை பெற்று, வங்கதேச விடுதலைக்கு வித்திட்டு மக்களின் பேராதரவு பெற்ற முஜிபுர் ரகுமானை, பிரதமர் பதவியில் அமர்த்தியவர் இந்திரா. வங்கதேசம் விடுதலை பெற்ற 50வது ஆண்டு பொன்விழாவை, காங்கிரஸ் முன்னாள் ராணுவத்தினர் பிரிவு சார்பில் நாடு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் முன்னாள் ராணுவத்தினர் பிரிவின் அமைப்பாளர் கேப்டன் பிரவீன்தவார் இன்று பங்கேற்று சிறப்புரை நிகழ்த்துகிறார்.இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X