அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேளாண் சட்டங்கள் தி.மு.க., தீர்மானம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
சென்னை-'பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்' என, தி.மு.க., - எம்.பி.,க் கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சென்னை அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., - எம்.பி.,க்கள் கூட்டம் நேற்று நடந்தது.அதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:தமிழக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின், 'மூன்று வேளாண்
 வேளாண் சட்டங்கள் தி.மு.க., தீர்மானம்

சென்னை-'பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்' என, தி.மு.க., - எம்.பி.,க் கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., - எம்.பி.,க்கள் கூட்டம் நேற்று நடந்தது.அதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:தமிழக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின், 'மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுக' என்ற தீர்மானத்தை முன்மொழிந்து வலியுறுத்தினார். அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு நடத்தி வந்த போராட்டத்திற்கு, தி.மு.க., தொடர்ந்து ஆதரவும் அளித்து வந்தது.

அந்த ஆதரவு எதிர்க்கட்சியாக இருந்த போதும்,- ஆளுங்கட்சியான பின்பும் தொடர்ந்தது. நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவது என்ற பிரதமரின் அறிவிப்பை, போராட்டம் வாயிலாக வெளியிட வைத்த விவசாயிகளுக்கு பாராட்டுக்கள்.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளில், மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் அறிவிப்பை,- சட்டமாக நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X