பொது செய்தி

தமிழ்நாடு

பாலியல் வன்கொடுமை; விழிப்புணர்வுக்கு விவாதம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஜமீன்ஊத்துக்குளி நாச்சியார் வித்யாலயம் பள்ளி சார்பில், பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு குறித்த விவாத மேடை நடந்தது.பொள்ளாச்சி, ஜமீன்ஊத்துக்குளி நாச்சியார் வித்யாலயம் பள்ளி சார்பில், குழந்தைகள் பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு விவாத மேடை, திருமண மண்டபத்தில் நடந்தது. பள்ளி நிறுவனர் சின்னசாமி, தலைவர் மணி, தாளாளர் விஜயலட்சுமி, மேற்கு
 பாலியல் வன்கொடுமை; விழிப்புணர்வுக்கு விவாதம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஜமீன்ஊத்துக்குளி நாச்சியார் வித்யாலயம் பள்ளி சார்பில், பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு குறித்த விவாத மேடை நடந்தது.பொள்ளாச்சி, ஜமீன்ஊத்துக்குளி நாச்சியார் வித்யாலயம் பள்ளி சார்பில், குழந்தைகள் பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு விவாத மேடை, திருமண மண்டபத்தில் நடந்தது. பள்ளி நிறுவனர் சின்னசாமி, தலைவர் மணி, தாளாளர் விஜயலட்சுமி, மேற்கு இன்ஸ்பெக்டர் அனந்தநாயகி, எஸ்.ஐ., முரளி முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் சகுந்தாலமணி வரவேற்றார்.திருநங்கைகள் உரிமை ஆர்வலர் கல்கி சுப்ரமணியம் விவாத மேடை தலைமை பொறுப்பினை ஏற்று நடத்தினார். ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். குழந்தைகளுக்கான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல், அதில் இருந்து விடுபடுவதற்கான பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான பங்களிப்பில் முக்கிய இடம் பெறுவது பள்ளியா, பெற்றோரா என்ற தலைப்பில் விவாத மேடை நடந்தது.விழிப்புணர்வு நாடகத்தில், ஒரு மாணவியின் தாய், தன் மகள் மன உளைச்சலில் இருப்பதை உணர்ந்து, பள்ளி முதல்வரை அணுகி விளக்குகிறார். பள்ளியில் செயல்பட்டு வரும், உள்ளார்ந்த புகார்கள் குழுவுடன் (இன்டர்னல் கம்பளைன்ட்ஸ் கமிட்டி) பங்கேற்று மாணவியின் பிரச்னை குறித்து விபரத்தை எவ்வாறு கையாளுகின்றனர்; மாணவியின் சுய அடையாளத்தையும், சுய பாதுகாப்பு குறித்து விளக்கமளிக்கப்பட்டது.பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், 'பள்ளியில் புகார் குழு, தலைவராக பள்ளி முதல்வர், பொறுப்பு ஆசிரியர்கள் ஆகியோருடன் செயல்படுகிறது. இந்தாண்டு முதல் புதிய இணைவாக கல்கி சுப்ரமணியம், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நித்யா, மேற்கு இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., ஆகியோருடன் புதிய குழு உருவாக்கப்பட்டு செயல்படும்.பாலியல் வன்கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வு குறித்து அறிய, நான்காம் வகுப்பு முதல், பிளஸ்2 வரை மாணவ, மாணவியருக்கு, ஏழு வினாக்கள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்பட்டது. அவர்களது கருத்துகள் கேட்டறியப்பட்டன,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X