அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பாலியல் குற்றம் தடுக்க செயல் திட்டம் தேவை': ராமதாஸ்

Updated : நவ 22, 2021 | Added : நவ 21, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை-'பாலியல் குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர, சட்ட உதவிகளை பெறுதல் உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய, விரிவான செயல் திட்டத்தை, அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: கரூர் மாவட்டம், வெண்ணெய் மலையில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 2- பயின்று வந்த மாணவி, தனக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைகளை தாங்கிக்
 'பாலியல் குற்றம் தடுக்க  செயல் திட்டம் தேவை': ராமதாஸ்

சென்னை-'பாலியல் குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர, சட்ட உதவிகளை பெறுதல் உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய, விரிவான செயல் திட்டத்தை, அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: கரூர் மாவட்டம், வெண்ணெய் மலையில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 2- பயின்று வந்த மாணவி, தனக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாமல், தற்கொலை செய்தது வேதனை அளிக்கிறது.கடந்த 12-ந்தேதி, கோவை தனியார் பள்ளி மாணவி ஒருவர், ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்தார். இப்போது, கரூர் மாணவி தற்கொலை செய்துள்ளார்.

அவரது தற்கொலைக்கு காரணமான குற்றவாளி மிருகம் யாராக இருந்தாலும், அவரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி, கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்.பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை அம்பலப்படுத்தி, தண்டனை பெற்று தருவதற்கான துணிச்சலை, மாணவியர் வளர்த்துக் கொள்ள வேண்டும்; அதற்கு அரசு துணை நிற்க வேண்டும்.பாலியல் குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர, சட்ட உதவிகளை பெறுதல் உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய விரிவான செயல் திட்டத்தை, அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும். இதற்காக வல்லுனர் குழுவையும் அமைக்க வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
22-நவ-202116:53:40 IST Report Abuse
மலரின் மகள் சமூகம், மக்கள் சார்ந்த பெரும் பிரச்சினைகளில் டாக்டர் ஐயா தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். பல தசாப்தங்களாக. மதுவுக்கு எதிராக ஸ்திரமாக இருப்பது டாக்டர் ஐயா என்று தாராளமாக பாராட்டலாம். தமிழகத்தின் மதுவிலக்கு இலாகாகவிற்கு டாக்டர் ஐயாவை தலைவராக நியமித்தால் நலமாக இருக்கும். மதுமுதலில் ஒழியவேண்டும். சமூக அவலங்கள் அனைத்தும் அடங்கிவிடும்.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
22-நவ-202116:22:45 IST Report Abuse
DVRR 1) ஒரே செயல் திட்டம் "தவறு கண்டேன் சுட்டேன் " சட்டம் ஒன்று தான் அதற்கப்புறம் அவன் / அவள் உயிரோடு இருந்தால் தானே இந்த பாலியல் தொல்லை இல்லையென்றால் எவனுக்கு தைரியம் வரும் இந்த வழியில் செல்ல 2) பாலியல் தொல்லை என்றால் என்ன ??? செய்தி 1 - 700 per பாலியல் செய்தனர் 6 மாதத்தில். வெறும் காரியம் தான் டப்பா அடிக்கின்றனர் காரணம் அறியாமல் உண்மை என்ன ' திருமணம் செய்து கொண்டாள். அவளுடைய மாமனார் பாலியல் தொல்லை. பெற்றோர் வீட்டிற்கு வந்தால் அவளை அனுமதிக்கவில்லை. வீதியில் பிச்சை எடுத்தாள். இரவில் பணத்திற்க்காக பாலியல் உறவு பலர் பணம் கொடுக்கவில்லை. வெறுத்துப்போய் போலீசில் 700 பேர் 6 மாதத்தில் பாலியல் தொல்லை புகார். பாலியல் தொல்லையா? 2) இரண்டு குழந்தைகளின் தாய் காதலித்த இளைஞன் மீது ஆசிட் ஊத்தி அவன் இறந்தான். உண்மை- இவளை திருமணம் ஆகாதவன் என்று காதலித்தான் உடல் உறவு கொண்டான். அவள் இரண்டு குழந்தைக்கு தாய் என்றதும் அதிர்ந்து இவள் வேண்டாம் என்று நிராகரித்தான். போலீசில் புகார் பாலியல் தொல்லை என்று. 3) திருமணம் நிச்சயம் - கடைசி நிமிடத்தில் பணம் நகையோடு முன்னாள் காதலனோடு ஓட்டம் அவன் ஏமாற்றினான் போலீசில் புகார் பாலியல் தொல்லை 4) சினிமாவில் ஒரு நடிகையாக ஒரு வாய்ப்பு தருகின்றேன். உனது வேலையில் உனக்கு ப்ரோமோஷன் தருகின்றேன். உனது சப்ஜெக்ட்டில் உனக்கு அதிக மார்க்கு தருகின்றேன். உனது Ph.D அங்கீகாரம் தருகின்றேன் - உனக்கு இதை செய்கின்றேன் ஆகவே நீ படுக்கையை என்னுடன் பகிர்ந்து கொள். இது நடக்கவில்லை. போலீசில் பாலியல் தொல்லை புகார். எல்லோரும் பார்ப்பது என்ன???பாலியல் தொல்லை மட்டும் தான்??ஏன் என்ற காரணம் யாரும் பார்ப்பதில்லை. சொன்ன வார்த்தை காப்பாற்றவில்லை ஆனால் பல நாட்கள் ஜல்ஸா செய்தும்???? ஆகவே எனது தீர்ப்பு - ஆணை சுட்டேன் பெண்ணின் தவறை அறிந்தேன் அவளையும் சுட்டேன். இதன் பிறகு ஒருவனுக்கும் தைரியம் வராது. இவை அனைத்தையும் எப் ஐ ஆர் பதிவு செய்த, கைது செய்த 7 நாட்களில் நடக்குமா???அது எவ்வளவு பணம் கிடைக்கின்றதோ அதை பொறுத்து சாவதானமாக நடக்கும்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
22-நவ-202112:21:27 IST Report Abuse
raja கண்டிப்பா பாலியல் கொடுமை செய்பவர்கள் மார்க்க பந்துகளா இருக்க கூடாது, சகோதர மதம் மாற்றும் மதமா இருக்க கூடாது... முக்கியமான பாதிக்க பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக இருக்கனும்.. என்க அக்கா கனிலிருந்து பப்பு பப்கிக்கா வரை விளக்கு பிடித்தும் , டைவ் அடித்தும் போராடுவோம் சே... பிண அரசியல் செய்வோம் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X