பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பணை பணி துவக்கம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, கோதவாடி குளத்துக்கு, போகம்பட்டி பகுதியில் பெய்யும் மழையே நீராதாரமாக உள்ளது. இப்பகுதியில் பெய்யும் மழையால், சிறு ஓடைகளில் சேகரமாகும் மழை நீர், சிற்றாறாக வடசித்துார் வழியாக கோதவாடி குளத்தை அடைகிறது. தற்போதைய நிலையில், பனப்பட்டி பகுதியில் பலத்த மழை பெய்வதில்லை. இதனால், தடுப்பணைகள் நிரம்புவதில்லை. கடந்த பல ஆண்டுகளாக பனப்பட்டி பகுதி வறட்சி

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, கோதவாடி குளத்துக்கு, போகம்பட்டி பகுதியில் பெய்யும் மழையே நீராதாரமாக உள்ளது. இப்பகுதியில் பெய்யும் மழையால், சிறு ஓடைகளில் சேகரமாகும் மழை நீர், சிற்றாறாக வடசித்துார் வழியாக கோதவாடி குளத்தை அடைகிறது. தற்போதைய நிலையில், பனப்பட்டி பகுதியில் பலத்த மழை பெய்வதில்லை. இதனால், தடுப்பணைகள் நிரம்புவதில்லை. கடந்த பல ஆண்டுகளாக பனப்பட்டி பகுதி வறட்சி பகுதியாக மாறியுள்ளது.இந்நிலையில், சுற்றுப்பகுதியில் பெய்யும் மழை நீரை சேமிக்கும் நடவடிக்கையாக, தேசிய ஊரக வளர்ச்சி பணிகள் நிதியில் இருந்து, 47.23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஐந்து தடுப்பணைகள் அமைக்கப்படுகிறது. இதற்கான, பூமி பூஜை பனப்பட்டியில் நடந்தது. கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் வரதராஜன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் மகேந்திரன், பனப்பட்டி உயர்நிலைப்பள்ளி பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் வேலுமணி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X