2 தாலுகாக்களில் 15 பேருக்கு தொற்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

2 தாலுகாக்களில் 15 பேருக்கு தொற்று

Added : நவ 21, 2021
Share
பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், இரு தாலுகாக்களில், நேற்று, 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட ஜூபிளி கிணறு வீதியில் ஒருவருக்கும், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சீலக்காம்பட்டி, அம்மேகவுண்டனுார், ஜமீன்ஊத்துக்குளியில் தலா, ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், இரு தாலுகாக்களில், நேற்று, 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட ஜூபிளி கிணறு வீதியில் ஒருவருக்கும், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சீலக்காம்பட்டி, அம்மேகவுண்டனுார், ஜமீன்ஊத்துக்குளியில் தலா, ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட காளியப்பம்பாளையம், நரசிங்காபுரம், போடிபாளையம், ராமபட்டிணம், கொண்டேகவுண்டன்பாளையம், அய்யம்பாளையத்தில் தலா, ஒருவர், ஆச்சிப்பட்டியில், இரண்டு பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. பொள்ளாச்சி தாலுகாவில், 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.கிணத்துக்கடவு தாலுகாவில், கொண்டம்பட்டி, பழனிக்கவுண்டன்புதுார், மன்றாம்பாளையம் கிராமங்களில் தலா ஒருவர் என, மூன்று பேருக்கு நேற்று தொற்று பரவல் உறுதியானது. பாதிக்கப்பட்ட மூன்று பேரின் குடும்ப உறுப்பினர்கள், ஐந்து பேரின் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு இரு தாலுகாக்களில், நேற்று, 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.ஆனைமலை, வால்பாறை இரு தாலுகாக்களிலும், கடந்த சில நாட்களாக யாருக்கும் தொற்று பரவல் உறுதியாகவில்லை. இதனால், சுகாதாரத்துறையினர் நிம்மதியடைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X