தமிழ்நாடு

கிராம உதவியாளர்கள் மாற்றம் பணிகள் பாதிக்கும் அபாயம்

Added : ஆக 05, 2011
Share
Advertisement
கம்பம்:கிராம உதவியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால், கிராமங்களில், பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றுவதற்காக, கிராம உதவியாளர்களை இடமாற்றம் செய்து தாசில்தார் சூரியகலா உத்தரவிட்டுள்ளார்.இதனால் கிராமங்களில் பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.உத்தமபாளையம் தாலுகாவில் 35 வருவாய் கிராமங்கள் உள்ளன.

கம்பம்:கிராம உதவியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால், கிராமங்களில், பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றுவதற்காக, கிராம உதவியாளர்களை இடமாற்றம் செய்து தாசில்தார் சூரியகலா உத்தரவிட்டுள்ளார்.இதனால் கிராமங்களில் பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.உத்தமபாளையம் தாலுகாவில் 35 வருவாய் கிராமங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் இரண்டு முதல் நான்கு பேர் வரை கிராம உதவியாளர் பணியிடங்கள் உள்ளன.

சில வாரங்களுக்கு முன் 19 கிராம உதவியாளர்களை பணியிடம் மாற்றம் செய்து தாசில்தார் உத்தரவிட்டார். மேலிட நிர்பந்தத்தால்,அதில் 11 பேருக்கு மட்டும் மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இது கிராம உதவியாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் 6 கிராம உதவியாளர்களை, உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் பணியாற்ற அழைக்கப்பட்டுள்ளனர். இதனால் கிராமங்களில் பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வருவாய்த்துறையினர் கூறியதாவது: தினக்கூலி பணியாளர்களை அனுமதிக்க வேண்டாம் என கலெக்டர் கூறியதால், அவர்களுக்கு பதிலாக கிராம உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. கிராமங்களில் பணி பாதிக்காது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X