பொது செய்தி

தமிழ்நாடு

இறைச்சிக்கழிவுகள் வீச்சு: இதை யார் தடுப்பது?

Added : நவ 21, 2021
Share
Advertisement
மடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதி ரோட்டில் வீசப்படும் இறைச்சிக்கழிவுகளால், சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு விபத்துகளும் நடக்கிறது.மடத்துக்குளம் தாலுகா கழுகரையிலிருந்து, வேடபட்டி செல்லும் ரோடு, இரண்டு கி.மீ., நீளமுடையது. இந்த ரோட்டின் இருபுறமும் பல்வேறு கழிவுகள் கொட்டப்படுகிறது. இறைச்சிக்கழிவுகளை மூட்டையாக கொண்டு வந்து ரோட்டில் வீசிச்செல்கின்றனர்.இதுகுறித்து,
 இறைச்சிக்கழிவுகள் வீச்சு: இதை யார் தடுப்பது?

மடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதி ரோட்டில் வீசப்படும் இறைச்சிக்கழிவுகளால், சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு விபத்துகளும் நடக்கிறது.மடத்துக்குளம் தாலுகா கழுகரையிலிருந்து, வேடபட்டி செல்லும் ரோடு, இரண்டு கி.மீ., நீளமுடையது. இந்த ரோட்டின் இருபுறமும் பல்வேறு கழிவுகள் கொட்டப்படுகிறது. இறைச்சிக்கழிவுகளை மூட்டையாக கொண்டு வந்து ரோட்டில் வீசிச்செல்கின்றனர்.இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது: கழுகரை அருகே ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில், இரவு நேரங்களில் வாகனங்களில் இறைச்சிகளை மூட்டையாக கொண்டு வந்து ரோட்டில் வீசிச்செல்கின்றனர். இதனால் இந்த பகுதி முழுவதும் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதை உண்ண வரும் நாய்கள், மூட்டைகளை கடித்துக்குதறுவதால் ரோடு முழுக்க இறைச்சிக்கழிவுகள் பரவிக்கிடக்கிறது.இதற்காக சண்டையிடும் நாய்கள், வாகனங்களின் குறுக்கே பாய்வதால் விபத்துக்கள் நடக்கிறது. பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அதை கொட்டுபவர்கள் மீது, சுகாதாரத்துறையினர் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X