பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதிப்பு தவிர்க்க தடுப்பூசி செலுத்திக்கணும்! 10வது கட்ட மெகா முகாமில் மக்கள் ஆர்வம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி, உடுமலை வருவாய் கோட்டத்தில், கொரோனா தொற்று தடுப்பு பணியாக, நேற்று, 10வது கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட வடுகபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், குமரன் நகர் சத்துணவு மையம் உள்ளிட்ட, 20 மையங்கள்; தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட, 52 மையங்கள், வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட, 70 மையங்களில் தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது.நேற்று மாலை, 6:30
 கொரோனா பாதிப்பு தவிர்க்க தடுப்பூசி செலுத்திக்கணும்! 10வது கட்ட மெகா முகாமில் மக்கள் ஆர்வம்

பொள்ளாச்சி, உடுமலை வருவாய் கோட்டத்தில், கொரோனா தொற்று தடுப்பு பணியாக, நேற்று, 10வது கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட வடுகபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், குமரன் நகர் சத்துணவு மையம் உள்ளிட்ட, 20 மையங்கள்; தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட, 52 மையங்கள், வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட, 70 மையங்களில் தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது.

நேற்று மாலை, 6:30 மணி வரை, நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், முதல் தவணை தடுப்பூசி, 250 பேரும், இரண்டாம் தவணை, 1,795 என மொத்தம், 2,045 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.தெற்கு ஒன்றியத்தில் முதல் தவணை, 554; இரண்டாம் தவணை, 3,441 என, மொத்தம், 3,995 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.வடக்கு ஒன்றியத்தில் முதல் தவணை, 441; இரண்டாம் தவணை, 4,572 என, மொத்தம், 5,013 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில், மொத்தம், 11,053 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.கிணத்துக்கடவுகிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்டு, நல்லட்டிபாளையம், சொக்கனுார், வடசித்துார் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாயிலாக, 40 முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.நல்லட்டிபாளையம் சுகாதார நிலையத்துக்கு உட்பட்டு அமைக்கப்பட்ட மையங்களில், 1,330 பேரும், சொக்கனுார் சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், 750 பேர், வடசித்துார் சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட மையங்கள் வாயிலாக, 666 பேருக்கும் நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. தாலுகாவில், மொத்தம், 2,746 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
வால்பாறை
வால்பாறை மலைப்பகுதியில், சுகாதாரத்துறை சார்பில், 40 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் பாபுலட்சுமணன் முகாம்களை கண்காணித்தார்.முகாம்களில், நேற்று,1,041 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. வால்பாறை தாலுகாவில், இதுவரை, 52,358 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.உடுமலைஉடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில், நேற்று சுகாதாரத்துறை சார்பில், மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. நகரம் மற்றும் கிராமங்களில், அனைவரும் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நேற்று, 10வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.

இதற்காக, அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், பஸ் ஸ்டாண்ட், ஊராட்சி அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் நடமாடும் சிறப்புக்குழு வாயிலாக, தடுப்பூசி செலுத்தப்பட்டது.உடுமலை நகராட்சி, உடுமலை ஒன்றியம், குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றிய கிராமங்கள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில், 156 முகாம்கள் நடத்தப்பட்டன.
குதிரையில் விழிப்புணர்வு
அரசு பொது இடங்களில் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி என அறிவித்துள்ளது. இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பொள்ளாச்சி நகராட்சி சார்பில், நுாதன பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. குதிரையில் தெரு, தெருவாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.நகராட்சி கமிஷனர் தாணுமூர்த்தி பிரசாரத்தை துவக்கி வைத்தார். நகர் நல அலுவலர் ராம்குமார், சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர்- நிருபர் குழு -.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X