பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளராக ஆர்வம்; முகாமில் குவிந்தன படிவங்கள்: உடுமலையில் இரண்டாம் முகாமில்

Added : நவ 21, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி, உடுமலை பகுதியிலுள்ள, ஐந்து சட்டசபை தொகுதியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்கு இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் நடந்தது.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த, 1ம் தேதி வெளியிடப்பட்டது. இதனையடுத்து, முதற் கட்ட சிறப்பு முகாம்கள் கடந்த வாரம் நடந்தது.தொடர்ந்து, இரண்டு நாட்கள் பொள்ளாச்சி தொகுதிக்கு உட்பட்ட, 269
 வாக்காளராக ஆர்வம்; முகாமில் குவிந்தன படிவங்கள்: உடுமலையில் இரண்டாம் முகாமில்

பொள்ளாச்சி, உடுமலை பகுதியிலுள்ள, ஐந்து சட்டசபை தொகுதியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்கு இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் நடந்தது.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த, 1ம் தேதி வெளியிடப்பட்டது. இதனையடுத்து, முதற் கட்ட சிறப்பு முகாம்கள் கடந்த வாரம் நடந்தது.

தொடர்ந்து, இரண்டு நாட்கள் பொள்ளாச்சி தொகுதிக்கு உட்பட்ட, 269 ஓட்டுச்சாவடிகளில் இரண்டாம் கட்ட முகாம்கள் காலை, 9:30 முதல் மாலை, 5:30 மணி வரை நடந்தது.சிறப்பு முகாமில் பெயர் சேர்க்க, படிவம் - 6, பெயர் நீக்கத்துக்கு படிவம் - 7, திருத்தத்துக்கு படிவம் - 8, பூர்த்தி செய்து வழங்க ஆர்வம் காட்டினர்.தொகுதிக்குள் முகவரி மாற்றத்துக்கு படிவம், 8ஏ விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கினர்.நேற்று முன்தினம் நடந்த முகாமில், மொத்தம், 342 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தொடர்ந்து நேற்றைய முகாமிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதேபோன்று, கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடந்தது.ஓட்டுச்சாவடி மையங்களில் நடந்த சிறப்பு முகாம்களை வருவாய்துறை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்தனர்.

மூன்றாம் கட்ட முகாம், வரும், 27 மற்றும், 28ம் தேதிகளில் ஓட்டுப்பதிவு மையங்களில் நடத்தப்பட உள்ளது.வால்பாறைவால்பாறை தொகுதிக்கு உட்பட்ட, 68 ஓட்டுச்சாவடி மையங்களில் இரண்டு நாட்கள் முகாம் நடந்தது. எஸ்டேட் பகுதியில் புதிய வாக்காளர்கள் அதிக அளவில் வாக்காளர் அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்தனர்.உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறவிருப்பதால், தி.மு.க., அ.தி.மு.க.,வினர் புதிய வாக்காளர்களை கண்டறிந்து, அவர்கள் பெயரை சேர்ப்பதில் தீவிரம் காட்டினர்.உடுமலைஉடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டது. வரும், 30ம் தேதி வரை, சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

அதன் அடிப்படையில், 2022 ஜன., 1ம் தேதி, 18 வயது நிரம்பியவர்கள் புதிய வாக்காளர்களாக சேரலாம் எனவும், வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள், www.nvsp.in என்ற இணைய தள முகவரியிலும், 'மொபைல்ஆப்' வாயிலாக, விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.மேலும், வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்து கொள்ள விண்ணப்பிக்கும் வகையில், இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடந்தது.
உடுமலை தொகுதியிலுள்ள ஓட்டுச்சாவடி மையங்களில் நேற்று முன்தினம் நடந்த முகாமில், மொத்தம், 351 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மடத்துக்குளம் தொகுதியில், 219 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.நேற்று காலை, மக்கள் போதிய ஆர்வம் காட்டாத நிலையில், சிறப்பு முகாம்கள் வெறிச்சோடி காணப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.- நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X