சம்பவம் செய்தி

தமிழ்நாடு

212 கிலோ கஞ்சா கடத்தல் முக்கிய புள்ளிகளுக்கு வலை

Added : நவ 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை-ஆந்திராவில் இருந்து ஈரோடுக்கு கடத்தவிருந்த, 212 கிலோ கஞ்சா மற்றும் மெத்தம் பெட்டமைன் உள்ளிட்ட, பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.ஆந்திராவில் இருந்து ஈரோடுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக, மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இப்பிரிவு போலீசார் இரு தினங்களுக்கு முன், ஆந்திராவில் இருந்து
 212 கிலோ கஞ்சா கடத்தல் முக்கிய புள்ளிகளுக்கு வலை

சென்னை-ஆந்திராவில் இருந்து ஈரோடுக்கு கடத்தவிருந்த, 212 கிலோ கஞ்சா மற்றும் மெத்தம் பெட்டமைன் உள்ளிட்ட, பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

ஆந்திராவில் இருந்து ஈரோடுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக, மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இப்பிரிவு போலீசார் இரு தினங்களுக்கு முன், ஆந்திராவில் இருந்து வேலுார் வழியாக கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் வாகனங்களை சோதனையிட்டனர்.அப்போது, வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா சுங்கச்சாவடி வழியாக மினி லாரி ஒன்று மின்னல் வேகத்தில் சென்றது.

இந்த வாகனத்தை போலீசார் மற்றொரு வாகனத்தில் துரத்தி மடக்கினர்.தேங்காய் நார் ஏற்றப்பட்ட அந்த லாரியில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 212 கிலோ கஞ்சா மூட்டைகள் கடத்தப்பட்டது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்துள்ள போலீசார், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர். கஞ்சா கடத்தல் தொடர்பாக முக்கிய புள்ளிகளுக்கு வலை விரித்துள்ளனர்.கூரியர் வாயிலாக...தற்போது, மழைக்காலம் என்பதால், மர்ம நபர்கள் கூரியர் சர்வீஸ் வாயிலாக, போதை பொருட்கள் கடத்துவது தெரியவந்து உள்ளது.

அந்த வகையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து, கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு கூரியரில் அனுப்ப இருந்த பார்சல் ஒன்றை சோதனையிட்டனர்.அதில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 244 கிராம் ஆம்பெட்டமைன், உதட்டின் உள் பகுதியில் ஒட்டிக்கொள்ளும் எல்.எஸ்.டி., ஸ்டாம்ப், 25; மெத்தாகுலோன், 2 கிராம் உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல, பெங்களூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கூரியர் பார்சலில், திண்பண்டங்களுடன் கடத்த இருந்த, 44 கிராம் மெத்தம் பெட்டமைன் என்ற போதை பொருளையும் கைப்பற்றினர். கடத்தலின் பின்னணியில், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துஉள்ளது. அதன் அடிப்படையில் தொடர் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
22-நவ-202106:15:25 IST Report Abuse
Mani . V கொஞ்சம் நல்ல வலையாகப் பார்த்து வாங்கவும். இல்லையென்றால் ஓட்டை போட்டு தப்பி விடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X