தொடரும் மழையால் உழவு பணி பாதிப்பு

Added : நவ 21, 2021
Share
Advertisement
தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், உழவு பணிகளை துவங்க முடியாமல் விவசாயிகள் உள்ளனர்.தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் 25,555 ஏக்கர் பரப்பளவில், விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு முக்கிய பயிராக, சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள், வாழை, தென்னை பயிரிடப்படுகிறது. அதோடு, குறுகிய கால பயிர்களான, முட்டைக்கோஸ், காலிபிளவர், கீரை வகைகள், கத்தரி,

தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், உழவு பணிகளை துவங்க முடியாமல் விவசாயிகள் உள்ளனர்.தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் 25,555 ஏக்கர் பரப்பளவில், விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு முக்கிய பயிராக, சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள், வாழை, தென்னை பயிரிடப்படுகிறது. அதோடு, குறுகிய கால பயிர்களான, முட்டைக்கோஸ், காலிபிளவர், கீரை வகைகள், கத்தரி, வெண்டை உள்ளிட்டவையும் பயிரிடப்படுகிறது.தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், கடந்த இரண்டு மாதங்களாக, தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், மண்ணில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதனால் உழவு பணிகள் துவங்க முடியாமல் உள்ளது. இதனால், புதிய சாகுபடிகளை துவங்க முடியாமல், விவசாயிகள் காத்திருக்கின்றனர்.தொண்டாமுத்தூர் வட்டார விவசாயிகள் கூறுகையில், 'தொடர்ந்து மழை பெய்து வருவதால், விளைநிலங்களில் மண்ணின் ஈரப்பதம் மிக அதிகமாக உள்ளது. இதனால், நிலத்தை உழவு செய்ய முடியாத நிலை உள்ளது. வழக்கமாக, மாசி மாதத்தில், சின்ன வெங்காயம் நடவு பணிகளை துவங்குவோம். அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே, உழவு பணிகளை துவங்குவோம். ஆனால், தற்போது, மண்ணின் ஈரம் காரணமாக, உழவு பணி துவங்கவில்லை' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X