வெள்ள பாதிப்புக்கு இழப்பீடு பன்னீர்செல்வம் வலியுறுத்தல்..| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வெள்ள பாதிப்புக்கு இழப்பீடு பன்னீர்செல்வம் வலியுறுத்தல்..

Added : நவ 21, 2021
Share
சென்னை-'மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:வடகிழக்கு பருவ மழை காரணமாக, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கடலுார் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு உட்பட்ட நுாற்றுக்கணக்கான பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும்

சென்னை-'மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:வடகிழக்கு பருவ மழை காரணமாக, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கடலுார் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு உட்பட்ட நுாற்றுக்கணக்கான பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம், ஆளும் தி.மு.க., அரசின் நிர்வாக திறமையின்மையே என, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சாத்தனுார் அணையும் நிரம்பி, அதிலிருந்த உபரி நீர் தென் பெண்ணையாற்றில் கலந்ததால், கடலுார் மாவட்டத்தில் உள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது.விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் முத்தாம்பாளையம், அய்யங்கோவில்பட்டு, கொய்யாத்தோப்பு கிராமங்களும் தண்ணீரில் மூழ்கின.தென்பெண்ணை ஆற்றில் இருந்து, 1.25 லட்சம் கன அடி தண்ணீர், அதாவது 12 மடங்கிற்கு மேலாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால், பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கின.நிவாரண நடவடிக்கைகளை அரசு நிர்வாகம் சரிவர செய்யாததால், மிகுந்த பரிதவிப்பிற்கு அப்பகுதி மக்கள் ஆளாக்கப்பட்டுஉள்ளனர்.

தண்ணீர் வடியாத நிலையில், மின்சாரம் மற்றும் குடிநீர் இன்றி தவிக்கின்றனர். ஆங்காங்கே போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே, முதல்-வர் இப்பிரச்னையில் உடனே தலையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்.இவ்வாறு பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X