பொது செய்தி

இந்தியா

மூணாறில் அதிகரிக்கும் குளிர்

Added : நவ 21, 2021
Share
Advertisement
மூணாறு--மூணாறில் மழை நின்ற 24 மணி நேரத்தில் குளிர் அதிகரித்தது.கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவ மழை ஜூனில் துவங்கி செப்டம்பர் வரை நீடிக்கும். அதன் பிறகு குளிர்காலம் துவங்கி விடும். டிசம்பர் இறுதி, ஜனவரி மாதங்களில் வெப்பநிலை மைனஸ் டிகிரி செல்சியஸ் வரை குறைந்து பனிபொழிவு ஏற்படும்.இந்தாண்டு ஜூன் 3ல் துவங்கிய பருவமழை அக்டோபர், நவம்பரில் நேற்று முன்தினம் வரை
 மூணாறில் அதிகரிக்கும் குளிர்

மூணாறு--மூணாறில் மழை நின்ற 24 மணி நேரத்தில் குளிர் அதிகரித்தது.கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவ மழை ஜூனில் துவங்கி செப்டம்பர் வரை நீடிக்கும். அதன் பிறகு குளிர்காலம் துவங்கி விடும். டிசம்பர் இறுதி, ஜனவரி மாதங்களில் வெப்பநிலை மைனஸ் டிகிரி செல்சியஸ் வரை குறைந்து பனிபொழிவு ஏற்படும்.இந்தாண்டு ஜூன் 3ல் துவங்கிய பருவமழை அக்டோபர், நவம்பரில் நேற்று முன்தினம் வரை நீடித்தது.நேற்று முன்தினம் பகலில் வெயில் அடித்த நிலையில் மாலையில் குளிர் தென்பட்டது. நேற்று முன்தினம் காலை வெப்பம் 15 டிகிரி செல்சியசாக இருந்த நிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 10 டிகிரி செல்சியசாக குறைந்தது. நேற்று மதியத்துக்கு பின் வெயில் குறைந்து குளிர துவங்கியது. இது சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X