சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிவகங்கை விபத்தில் 4 பேர் பலி

Added : நவ 21, 2021
Share
Advertisement
மானாமதுரை-சிவகங்கை மாவட்டத்தில் நடந்த இரு விபத்துக்களில் 4 பேர் பலியாகினர். 9 பேர் காயமடைந்தனர்.மானாமதுரை அருகே நல்லாண்டிபுரம் டி.நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் 45, கோவை சேரன்மாநகரில் வசிக்கிறார். இவர் குடும்பத்தினர் 10 பேருடன் காரில் கோவையிலிருந்து தாயமங்கலம் செல்வதற்காக நேற்று அதிகாலை 5:30 மணிக்கு வந்த ேபாது கார் மானாமதுரையை அடுத்து மாங்குளம்
 சிவகங்கை விபத்தில் 4 பேர் பலி

மானாமதுரை-சிவகங்கை மாவட்டத்தில் நடந்த இரு விபத்துக்களில் 4 பேர் பலியாகினர். 9 பேர் காயமடைந்தனர்.மானாமதுரை அருகே நல்லாண்டிபுரம் டி.நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் 45, கோவை சேரன்மாநகரில் வசிக்கிறார். இவர் குடும்பத்தினர் 10 பேருடன் காரில் கோவையிலிருந்து தாயமங்கலம் செல்வதற்காக நேற்று அதிகாலை 5:30 மணிக்கு வந்த ேபாது கார் மானாமதுரையை அடுத்து மாங்குளம் குப்பைக்கிடங்கு அருகே கட்டுப்பாட்டை இழந்து ரோட்டிலிருந்து பல மீட்டர் துாரம் சென்று கவிழ்ந்ததில் ஐயப்பன் மகள் ஆர்த்தி 17, பாண்டி 45, பலியாகினர். டிரைவர் குமார் 27,கிருஜா 18,திருமலை 16, ஐயப்பன் 45, தேவி 37, திருஞானம் 24, கருவேல்முருகன் 20, கார்த்திக் 8 பேரும் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனார். மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.* சிவகங்கை அருகே கொல்லங்குடி அழகர்சாமிநகரை சேர்ந்த மாதவன் மனைவி சரஸ்வதி 50, இவர் கொல்லங்குடி மினி கிளினிக்கில் தடுப்பூசி போட்டு விட்டு வீட்டிற்கு நடந்து சென்றார். நாட்டரசன்கோட்டையை சேர்ந்த கொத்தனார் கமலக்கண்ணன் 30, ஓட்டி வந்த டூவீலர் கொல்லங்குடி விலக்கு அருகே நடந்து வந்த சரஸ்வதி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே சரஸ்வதியும், டூவீலரின் பின்னால் அமர்ந்து வந்த சுப்ரதீபம்40, பலியாகினர். கமலக்கண்ணன் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காளையார்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X