சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓமியோபதி டாக்டர் தற்கொலை சம்பவம் மருத்துவ இணை இயக்குனர் மீது வழக்கு

Added : நவ 21, 2021
Share
Advertisement
பெரியகுளம்-தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் ஓமியோபதி டாக்டர் சீனிவாசன் 50, துாக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் அவரை தற்கொலைக்கு துாண்டியதாக மருத்துவ இணை இயக்குனர் லட்சுமணன் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனை இணை இயக்குனர் அலுவலகத்தில் மருத்துவத்துறையினர் விசாரணையை துவக்கினர்.லட்சுமிபுரம் என்.ஆர்.டி., தெரு

பெரியகுளம்-தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் ஓமியோபதி டாக்டர் சீனிவாசன் 50, துாக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் அவரை தற்கொலைக்கு துாண்டியதாக மருத்துவ இணை இயக்குனர் லட்சுமணன் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனை இணை இயக்குனர் அலுவலகத்தில் மருத்துவத்துறையினர் விசாரணையை துவக்கினர்.லட்சுமிபுரம் என்.ஆர்.டி., தெரு ஓமியோபதி டாக்டர் சீனிவாசன். வீட்டு தரைதளத்தில் 'எலக்ரோ ஓமியோபதி கிளினிக்' நடத்தினார். நேற்று முன்தினம் காலை கிளினிக்கில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மனைவி புகார்''கிளினிக் நடத்துவதில் குறைபாடு உள்ளது.

அதை சரிசெய்ய மாதம் ரூ.20 ஆயிரம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சீல் வைத்து விடுவேன்'' என பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனை இணை இயக்குனர் லட்சுமணன் கூறியுள்ளார். சீனிவாசன்ரூ.20 ஆயிரம் வழங்கினார். தொடர்ந்து அவர் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் மன உளைச்சலில் சீனிவாசன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என அவரது மனைவி சாந்தி, தென்கரை போலீசில் புகார் செய்தார். முதலில் சந்தேகமரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டது. டி.எஸ்.பி., முத்துக்குமார் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இணை இயக்குனர் மீது தற்கொலைக்கு துாண்டியதாகவழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை தேடுகின்றனர்.

மருத்துவத்துறை விசாரணை துவக்கம்

இதற்கிடையே சென்னை மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் கூடுதல் இயக்குனர் சம்சத், மருத்துவக்குழுவினர் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் அலுவலகத்தில் முதல் கட்ட விசாரணையை துவக்கினர். மருத்துவமனை கண்காணிப்பாளர் குமார், நிலைய அலுவலர் ஆசியா, செவிலியர் கண்காணிப்பாளர் சந்திரா, அலுவலக நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமியிடம் ஒரு மணி நேரம் விசாரித்தனர். இதில் முக்கிய தகவல் கிடைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. அடுத்த கட்ட விசாரணை ஓரிரு நாளில் நடக்க உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X