சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.எஸ்.ஐ., வெட்டிக் கொலை ஆடு திருடும் கும்பல் அட்டூழியம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
புதுக்கோட்டை,-ஆடு திருடர்களை விரட்டிச் சென்ற எஸ்.எஸ்.ஐ., அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை பிடிக்க, எட்டு தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன.திருச்சி மாவட்டம், நவல்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் மூன்று ஆண்டுகளாக எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றியவர் பூமிநாதன், 56. ரோந்து பணிஇவரது சொந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு அருகே சந்தைவெளி கிராமம். இவருக்கு கீதா, 48, என்ற
 எஸ்.எஸ்.ஐ., வெட்டிக் கொலை ஆடு திருடும் கும்பல் அட்டூழியம்

புதுக்கோட்டை,-ஆடு திருடர்களை விரட்டிச் சென்ற எஸ்.எஸ்.ஐ., அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை பிடிக்க, எட்டு தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன

.திருச்சி மாவட்டம், நவல்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் மூன்று ஆண்டுகளாக எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றியவர் பூமிநாதன், 56. ரோந்து பணிஇவரது சொந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு அருகே சந்தைவெளி கிராமம். இவருக்கு கீதா, 48, என்ற மனைவி, அண்ணா பல்கலையில் எம்.இ., படிக்கும் குகன், 24, என்ற மகன் உள்ளனர்.நவல்பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில், நேற்று அதிகாலை 3:00 மணியளவில் பூமிநாதன் மற்றும் ஏட்டு சித்திரவேல், 50, ஆகிய இருவரும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, நவல்பட்டு சாலையில் இரண்டு பைக்குகளில் நால்வர் வந்தனர். ஒரு பைக்கில் ஆடுகளுடன் வந்த நபர்களை நிறுத்தியபோது, அவர்கள் நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றனர்.அவர்கள் ஆடு திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதை தெரிந்து கொண்ட பூமிநாதன், ஆடுகள் இல்லாமல் சென்றவர்களின் பைக்கை, தன் பைக்கில் விரட்டிச் சென்றுள்ளார். ஆடுகளுடன் சென்றவர்கள் பைக், மற்றொரு வழியில் சென்று விட்டது. ஏட்டு சித்திரவேலால் வேகமாக வர முடியவில்லை.

சுற்றிவளைப்பு

அவர்கள் திருச்சி - புதுக்கோட்டை சாலையில் சென்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், களமாவூர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள பள்ளத்துப்பட்டி சென்ற போது, ரயில்வே சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்கி இருந்ததால், பைக்கில் சென்ற திருடர்கள் தப்பிக்க முடியாமல் நின்றனர். அவர்களை சுற்றிவளைத்த பூமிநாதன், ஏட்டு சித்திரவேலுக்கும், கீரனுாரைச் சேர்ந்த போலீஸ்காரர் சேகர் என்பவருக்கும் தகவல் அளித்துள்ளார்.
அதிர்ச்சி

போலீசாரிடம் சிக்கக் கூடாது என்பதற்காக, தங்கள் பைக்கில் வைத்திருந்த அரிவாளை எடுத்து, பூமிநாதனை தலை மற்றும் கழுத்தில் வெட்டிக் கொலை செய்து, ஆடு திருடர்கள் இருவரும் தப்பியோடி விட்டனர்.பூமிநாதனை தேடி வந்த சேகர், சித்திரவேல் ஆகியோர், அவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். திருச்சி டி.ஐ.ஜி., சரவண சுந்தர், திருச்சி எஸ்.பி., சுஜித்குமார், போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.சம்பவம் குறித்து, கீரனுார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டன. கைரேகை நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க, எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பூமிநாதன் உடல், திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலுக்கு, ஏ.டி.ஜி.பி., செந்தாமரைக் கண்ணன் உட்பட போலீஸ் அதிகாரிகள் பலரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.நேற்று மாலை அவரது உடல், திருச்சி சோழமா நகரில் போலீசாரின் துப்பாக்கி குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X