சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : நவ 21, 2021
Share
Advertisement
சிறுவாச்சூர் கோவிலில் பாலாலயம்பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், சிறுவாச்சூரில் உள்ள பெரியசாமி கோவிலில் ஒரு மாதத்துக்குள், மூன்று முறை சுவாமி சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக நாதன், 42 என்பவரை கைது செய்துள்ளனர்.சேதப்படுத்தப்பட்ட சிலைகளை ஆறு மாதங்களில் செய்து தருவதாக, ஸ்தபதி முனியசாமி தெரிவித்துள்ளார். இதையடுத்து, இக்கோவிலில் நேற்று காலை பாலாலய

சிறுவாச்சூர் கோவிலில் பாலாலயம்

பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், சிறுவாச்சூரில் உள்ள பெரியசாமி கோவிலில் ஒரு மாதத்துக்குள், மூன்று முறை சுவாமி சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக நாதன், 42 என்பவரை கைது செய்துள்ளனர்.சேதப்படுத்தப்பட்ட சிலைகளை ஆறு மாதங்களில் செய்து தருவதாக, ஸ்தபதி முனியசாமி தெரிவித்துள்ளார். இதையடுத்து, இக்கோவிலில் நேற்று காலை பாலாலய சிறப்பு யாகம் நடந்தது. கோவிலில் இருந்த சுவாமிகள் ஸ்துாலத்தில் வைக்கப்பட்டு, கோவிலின் ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டன. அங்கு சுவாமிகளுக்கு வழக்கமான பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.

வெள்ளத்தில் 1,500 கோழிகள் பலி

பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், பாலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி கலையரசி, 35; இதே கிராமத்தில், ஓடை அருகே உள்ள தன் வயலில் குடில் அமைத்து கோழிப் பண்ணை வைத்துள்ளார். 3,000க்கும் மேற்பட்ட கோழிகள் இருந்தன.நேற்று முன்தினம் இரவு முழுதும் தொடர்ந்து பெய்த கன மழையால், ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து, கலையரசியின் பண்ணைக்குள் புகுந்தது. பண்ணையில் இருந்த 2.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 1,500க்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் நீரில் மூழ்கியும், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டும், குளிராலும் இறந்தன.

வீடு இடிந்து முதியவர் உயிரிழப்பு

தண்டராம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த ரெட்டியார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சடையன், 65; விவசாயி. இவரது மனைவி சாவித்ரி. ஒரு மகள், மூன்று மகன்கள் திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர். சடையன் தம்பதி, தங்கள் விவசாய நிலத்தில் உள்ள கூரை வீட்டில் வசித்தனர்.இந்நிலையில், கன மழை காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு இவர்களது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இடிபாட்டில் சிக்கிய சடையன் பலியானார். சாவித்ரி லேசான காயத்துடன் தப்பினார்.

ரயில் மோதி இருவர் சாவுஅரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே தக்கோலத்தைச் சேர்ந்தவர்கள் பார்த்தசாரதி, 30; சுகுமார், 26; கூலித் தொழிலாளர்கள். நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு தக்கோலம் அருகே சேர்ந்தமங்கலம் ரயில்வே கேட் தண்டவாளத்தை இவர்கள் கடந்து சென்றனர். அப்போது, சென்னை கடற்கரையில் இருந்து, அரக்கோணம் சென்ற மின்சார ரயில் மோதியதில், இருவரும் உயிரிழந்தனர்.

கள்ள நோட்டு: மூவர் கைது

ஊட்டி: நீலகிரி மாவட்டம், ஊட்டி லோயர் பஜார் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையில் ஒருவர் கள்ளநோட்டு கொடுத்து மது கேட்டு தகராறு செய்துள்ளார். ஊட்டி போலீசார் விசாரணையில், கோவையைச் சேர்ந்த தீனதயாளன், 32, அவரது கூட்டாளி புதுச்சேரியைச் சேர்ந்த கோபிநாத், 25; ஊட்டி காந்தள் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான், 28, ஆகியோர் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவது தெரிந்தது. மூவரையும் கைது செய்து, 25 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

சுடுதண்ணீரில் 3 வயது குழந்தை பலிவிழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மாமந்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன், 34; மனைவி சுகுனா, 28; மகன் மோதிஸ்வரன், 3. சுகுணா கடந்த 16ம் தேதி குழந்தை மோதிஸ்வரனை குளிக்க வைப்பதற்காக ஒரு பாத்திரத்தில் சுடுதண்ணீர் ஊற்றி வைத்து, வீட்டிற்குள் சென்றுள்ளார்.எதிர்பாராதவிதமாக மோதிஸ்வரன் அன்னக்கூடையில் இருந்த சுடுதண்ணீரில் இறங்கியதில், வயிற்றின் அடி பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், நேற்று முன்தினம் உயிரிழந்தான்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X