முன்னறிவிப்பில்லாமல் பஸ்கள் நிறுத்தப்படுவதால் மக்கள் பாதிப்பு

Added : நவ 21, 2021
Share
Advertisement
திருப்புவனம் : திருப்புவனம் வட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் அரசு டவுன் பஸ்கள் திடீரென நிறுத்தப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.திருப்புவனம் அரசு கிளை பணிமனை மூலம் 153 கிராமங்களுக்கு 44 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர மதுரை கோட்டம் மூலமாகவும் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. சில நாட்களாக கல்லுாரணி, வேம்பத்துார் செல்லும் டவுன் பஸ்கள் காலை

திருப்புவனம் : திருப்புவனம் வட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் அரசு டவுன் பஸ்கள் திடீரென நிறுத்தப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருப்புவனம் அரசு கிளை பணிமனை மூலம் 153 கிராமங்களுக்கு 44 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர மதுரை கோட்டம் மூலமாகவும் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. சில நாட்களாக கல்லுாரணி, வேம்பத்துார் செல்லும் டவுன் பஸ்கள் காலை வேளையில் இயக்கப்படவில்லை.நேற்று முன்தினம் காலை திருப்புவனத்தில் இருந்து கிளம்பிய (TN58 N1840) டவுன் பஸ்சில் வேம்பத்துாருக்கு பயணிகள் டிக்கெட் கேட்ட போது கண்டக்டர் தர மறுத்துள்ளார்.

திருப்பாச்சேத்தி வரை தான் பஸ் செல்லும் என தெரிவித்துள்ளார்.பயணிகள் வாக்குவாதம் செய்யவே கண்டக்டரும் டிரைவரும் பஸ்சை நிறுத்தி விட்டு கீழே இறங்கி சென்று விட்டனர்.கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்படுவதால் அதனை நம்பியுள்ள மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதால் இதனை தடுக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X