மாவட்ட பூப்பந்தாட்ட அணி வீரர், வீராங்கனைகள் தேர்வு

Added : நவ 21, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாவட்ட பூப்பந்தாட்ட அணிக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு நேற்று நடந்தது.66வது தமிழ்நாடு மாநில ஜூனியர் சாம்பியன்ஷிப் பூப்பந்தாட்ட போட்டி, கடலூர் மாவட்டம் வைரங்குப்பத்தில் உள்ள ஸ்ரீ மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லூரியில் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நடக்கிறது.போட்டியில் பங்கேற்கும் கோவை மாவட்ட ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கான தேர்வு, நேரு ஸ்டேடியம் அருகே

கோவை:கோவை மாவட்ட பூப்பந்தாட்ட அணிக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு நேற்று நடந்தது.66வது தமிழ்நாடு மாநில ஜூனியர் சாம்பியன்ஷிப் பூப்பந்தாட்ட போட்டி, கடலூர் மாவட்டம் வைரங்குப்பத்தில் உள்ள ஸ்ரீ மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லூரியில் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நடக்கிறது.போட்டியில் பங்கேற்கும் கோவை மாவட்ட ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கான தேர்வு, நேரு ஸ்டேடியம் அருகே உள்ள பூப்பந்து மைதானத்தில் நேற்று நடந்தது. 100க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.ஆண்கள் பிரிவில் மனோஜ்குமார், தரணீஸ், தரணீதரன், சஞ்சுலால், கிருஷ்ணா அரவிந்தா, அஸ்வான், சந்தோஷ், தருண் குமார், மணிகண்டன், தென் தமிழரசன் ஆகியோரும் பெண்கள் பிரிவில் சரண்யா, நந்தினி, சவுந்தர்யா, செசிலியா, பிரிசில்லா மேரி, சுபாஷினி, வைஷ்ணுதேவி, முத்தரசி, சவுந்தர்யா ஸ்ரீ ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர் வீராங்கனைகள், கோவை மாவட்ட அணிக்காக மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வர்.மாநில அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர், வீராங்கனைகள் அடுத்த ஆண்டு ஜன.,26 முதல் 30ம் தேதி வரை, பீகார் மாநிலத்தில் நடைபெறும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X